தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2201

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும், அது இல்லாவிட்டால் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 2201)

حَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءٍ الْعَطَّارِ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«يَتَصَدَّقُ بِدِينَارٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَنِصْفُ دِينَارٍ» – يَعْنِي: الَّذِي يَغْشَى امْرَأَتَهُ حَائِضًا –


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2201.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2119.




إسناد شديد الضعف فيه عطاء بن عجلان الحنفي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉல் அத்தார்- அதா பின் அஜ்லான் பெரும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.(பாகம் 7 பக்கம் 209)

சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-264 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.