தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-264

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 106

மாதவிலக்கானவளிடம் உடலுறவு கொள்ளல்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூதாவூத் கூறுகிறார்:

சரியான அறிவிப்புகளில் இவ்வாறே ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று வந்துள்ளது.

சில அறிவிப்புகளில் இச்செய்தியை ஷுஃபா அவர்கள், நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.

(அபூதாவூத்: 264)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»

قَالَ أَبُو دَاوُدَ: هَكَذَا الرِّوَايَةُ الصَّحِيحَةُ قَالَ: «دِينَارٌ أَوْ نِصْفُ دِينَارٍ»
وَرُبَّمَا لَمْ يَرْفَعْهُ شُعْبَةٌ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-230.
Abu-Dawood-Shamila-264.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-230.




  • இந்த கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன. பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன.

மேற்கண்ட செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லை. இது சரியான அறிவிப்பாளர் தொடர் என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடும் இல்லை.

  • இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றா? என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு உள்ளது.

1 . ஷுஃபாவின் மாணவர்களில் யஹ்யா பின் சயீத், முஹம்மது பின் ஜஃபர், இப்னு அபீ அதீ, வஹப் பின் ஜரீர், சயீத் பின் ஆமிர், நள்ர் பின் ஷுமைல், அப்துல் வஹ்ஹாப் பின் அதாஃ ஆகியோர் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர்.

2 . ஷுஃபாவின் மாணவர்களில் அஃப்பான் பின் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 134
இறப்பு ஹிஜ்ரி 220
வயது: 86
சுலைமான் பின் ஹர்ப், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம், ஹஃப்ஸ் பின் உமர், ஹஜ்ஜாஜ் பின் மின்ஹால் மற்றும் பலர் இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர்.

  • இந்த வேறுபாட்டின் காரணமாக ஷுஃபாவின் அறிவிப்பும் குழப்பமானது என்ற அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இதை எடுக்காமல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று என்பதே சரி என பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் ஷுஃபாவின் அறிவிப்பில் எந்தக் குழப்பமும் இல்லை. இந்தச் செய்தியை ஷுஃபாவிற்கு அறிவித்த ஷுஃபாவின் ஆசிரியர் ஹகம் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாகவும் இரண்டு விதங்களில் அறிவித்துள்ளார். எனவே ஷுஃபா தனது மாணவர்களில் சிலருக்கு இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும், சிலருக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாகவும் அறிவித்துள்ளார்.

இரண்டும் சரியான தகவல்தான். நபி (ஸல்) அவர்கள் கூறிய எத்தனையோ செய்திகள் நபித்தோழர்களின் கூற்றாகவும் ஆதாரப்பூர்வமாக நமக்கு வந்துள்ளது. இதனால் குழம்ப வேண்டியதில்லை.

  • ஷுஃபா ஆரம்பத்தில் இது நபியின் கூற்று என்ற கருத்தில் இருந்ததாகவும் பின்னர் இதிலிருந்து மாறி இது நபித்தோழரின் கூற்று என்பதே சரி எனக் கூறியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது சரியான கூற்றல்ல.

அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ கூறுகிறார் : தன் மனைவி மாதவிடாய் காலத்தில் இருக்கும்போது உடலுறவு கொண்டவர் விசயத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் எனக் கூறியதாக ஷுஃபா எங்களுக்கு அறிவித்தார். அப்போது ஷுஃபாவிடத்தில் நீங்கள் இதை நபி (ஸல்) அவர்களின் கூற்றாகக் கூறினீர்களே என்று கேட்கப்பட்டது. அதற்கு ஷுஃபா நான் பைத்தியமாக இருந்தபோது அது சரி என்று கூறினேன் என்று கூறினார்.

நூல் : பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
(பாகம் 1 பக்கம் 315)

  • இது நபிகளாரின் கூற்றாக இருக்கும்போது பலர் இதை மறுத்ததால் ஷுஃபா இந்த ஹதீஸை அறிவிக்க தான் விரும்பவில்லை என்பதை முன்பு கூறினார் என்பதைப் பார்த்தோம். தான் சொல்வதைக் கேட்காமல் எதிர்வாதம் புரிபவர்களிடத்தில் பதிலுக்கு பதில் பேசக்கூடியவராக ஷுஃபா இல்லை. மாறாக பிரச்சனையை விட்டும் ஒதுங்கக்கூடியவராகவே இருந்துள்ளார்.
  • இந்த அடிப்படையில் தான் ஷுஃபா கோபப்பட்டு மேற்கண்ட வாசகத்தை கூறியுள்ளார். தன்னை பைத்தியம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். சிறந்த மனனத்தன்மை கொண்ட ஷுஃபா தன்னை பைத்தியம் என்று சொல்கிறார் என்றால் இது கோபத்தில் கூறிய வார்த்தை என்பதை அறிய முடிகின்றது.
  • எனவே ஷுஃபா தர்கிப்பதைத் தவிர்ப்பதற்காக கோபத்தில் கூறிய இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு நபி (ஸல்) கூறியதாக அவர் அறிவித்த அறிவிப்பை நாம் நிராகரிக்க முடியாது. எனவே தான், அஹ்மது பின் ஹம்பள் மற்றும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    ஆகிய இருவரும் ஷுஃபாவின் இந்த குறிப்பிட்ட அறிவிப்பை மட்டும் சரியானது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஒரு தீனார் என்பது அன்று வழக்கத்தில் இருந்த தங்க நாணயமாகும். சுமார் நான்கரை கிராம் எடை கொண்ட நாணயம் தீனார் எனப்படும். நான்கரை கிராம் அல்லது இரண்டேகால் கிராம் தங்கத்தின் மதிப்பிலான தொகையை தர்மம் செய்ய வேண்டும் என்பது இதற்கான பரிகாரமாகும்.

இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . ஷுஃபா —> ஹகம் —> அப்துல் ஹமீத் —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2595 , தாரிமீ-1146 , 1147 , இப்னு மாஜா-640 , அபூதாவூத்-2642168 , நஸாயீ-289 ,  370 , குப்ரா நஸாயீ-278 , 9050 , 9051 , அல்முஃஜமுல் கபீர்-12066 , ஹாகிம்-612 , குப்ரா பைஹகீ-1511 , 1512 ,

2 . அப்துல் கரீம் —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அப்துர் ரஸ்ஸாக்-1264 , 1265 , 1266 , அபீ ஷைபா-12372 , அஹ்மத்-3473 , இப்னு மாஜா-650 , திர்மிதீ-137 , முஸ்னத் பஸ்ஸார்-4750 , குப்ரா நஸாயீ-9058 , 9059 , முஸ்னத் அபீயஃலா-2432 , அல்முஃஜமுல் கபீர்-12133 , 12134 , 12135 ,  தாரகுத்னீ-3746 , 3747 , 3748 , 3749 , குப்ரா பைஹகீ-1521 , 1522 ,1523 , 1524 , 1525 ,

3 . குஸைஃப் —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1261 , 12621263 , அபீஷைபா-12371 , அஹ்மத்-2458 , தாரிமீ-1145 , 1149 , 1151 , அபூதாவூத்- 266 , திர்மிதீ-136 , குப்ரா நஸாயீ-9060 , 9063 , 9064 , 9065 , 9066 , அல்முஃஜமுல் கபீர்-1169812025 , தாரகுத்னீ-3746 , 3747 , குப்ரா பைஹகீ-1519 , 1520 ,

4 . யஃகூப் பின் அதாஉ —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: தாரகுத்னீ-3745 ,

5 . ஹகம் —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அபீ ஷைபா-12375 , தாரிமீ- 1152 , குப்ரா நஸாயீ- 9052 , 9053 ,

6 . மதருல் வர்ராக் —> ஹகம் —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

அல்முஃஜமுல் கபீர்-12132 , குப்ரா பைஹகீ-1513 ,

7 . அலீ பின் பதீமா —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1263 , தாரகுத்னீ-3746 , 3747 , குப்ரா நஸாயீ-9067 , 9068 , குப்ரா பைஹகீ-1520 ,

8 . அதாஉ பின் அபீ ரபாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அபீ ஷைபா-12383 , தாரிமீ-1153 , 1158 , குப்ரா பைஹகீ-1529 ,

9 . அதாஉல் அத்தார் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2201 , 2788 ,  3428 , அல்முஃஜமுல் கபீர்-11921 , குப்ரா பைஹகீ- 1528 ,

10 . ஹகம்- இக்ரிமா

குப்ரா நஸாயீ-9054 ,

11 . அவ்ஸாயீ …

பார்க்க: அபீ ஷைபா-12373 ,

12 . பார்க்க: அஹ்மத்-2032 ,

13 . கத்தாதா —>  மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2121 , 2122 , 2843 , 3145 , குப்ரா நஸாயீ-9056 , 9057 , குப்ரா பைஹகீ-1514 ,

14 . குப்ரா நஸாயீ-9055 , குப்ரா பைஹகீ-1515 , 1516 ,

15 . அல்முஃஜமுல் கபீர்-12129 , 12130 , 12131 ,

16 . அபுல் ஹஸன் —> மிக்ஸம் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-265 , 2169 , ஹாகிம்- 613 , குப்ரா பைஹகீ-1526 ,

17 . தாரிமீ-1148 ,

18 . தாரிமீ-1155 ,

19 . அல்முஃஜமுல் கபீர்-12065 ,

20 . அல்முஃஜமுல் கபீர்-12256 ,

21 . இப்னு அதா —> மிக்ஸம்

குப்ரா பைஹகீ-1527 ,

more work…

கூடுதல் தகவல் : மாதவிடாய் உறவின் பரிகாரம் என்ன? .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.