18870. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், எழுந்து நின்று “தக்பீர்’கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் “ருகூஉ’ செய்ய விரும்பியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக் கால்களின் மீது வைத்தார்கள்.
பின்னர் தமது தலையை (“ருகூஉ’விலிருந்து) நிமிர்த்தியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் “சஜ்தா’ செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டைவிரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை அசைத்ததை நான் பார்த்தேன்…
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، أَخْبَرَنِي أَبِي، أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ، أخْبَرَهُ قَالَ:
قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ يُصَلِّي؟ قَالَ: فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَالرُّسْغِ وَالسَّاعِدِ، ثُمَّ قَالَ: لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ، رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا، ثُمَّ سَجَدَ، فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ، ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، فَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ حَلْقَةً، ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ، فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا
«، ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمُ الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنَ الْبَرْدِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18115.
Musnad-Ahmad-Shamila-18870.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18487.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
ஆய்வுத் தகவல்:
அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைக்க வேண்டுமா? அல்லது இஷாரா-சைகை செய்ய வேண்டுமா? என்பதில் ஹதீஸ்துறை அறிஞர்களிடம் இரு கருத்து உள்ளது.
1 . இந்தச் செய்தியை ஆஸிம் பின் குலைப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அதிகமானோர் “நபி (ஸல்) அவர்கள் இஷாரா-சைகை செய்தார்கள்” என்று அறிவித்துள்ளனர். ஆஸிம் பின் குலைப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாயிதா பின் குதாமா அவர்கள் மட்டும் “அசைத்தார்கள்” என்ற கருத்தில் அறிவித்துள்ளார். மேலும் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அல்லாத மற்ற நபித்தோழர்களில் இப்னுஸ் ஸுபைர் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) போன்ற இன்னும் சில நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகளில் “நபி (ஸல்) அவர்கள் இஷாரா-சைகை செய்தார்கள்” என்று இருப்பதால் அதிகமான அறிஞர்கள் ஸாயிதா பின் குதாமா அவர்களின் செய்தியை ஷாத் என்று கூறியுள்ளனர். மேலும் சிலர், “அசைத்தார்கள்” என்ற கருத்தில் உள்ள செய்திகளின் பொருளும் இஷாரா தான். கை விரலை உயர்த்தும்போது ஏற்படும் அசைவு தான் அது என்றும் விளக்கம் கூறுகின்றனர்.
2 . வேறு சில அறிஞர்கள் ஸாயிதா பின் குதாமா அவர்களின் அறிவிப்பு “எவ்வாறு சைகை செய்வது” என்பது பற்றி கூடுதல் தகவலாக வந்துள்ளது என்று கூறி இதை சரியானச் செய்தி என்று கூறியுள்ளனர்.
…
1 . இந்தக் கருத்தில் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஸாயிதா பின் குதாமா அவர்களின் அறிவிப்புகள்:
ஸாயிதா பின் குதாமா —> ஆஸிம் பின் குலைப் ….
பார்க்க: அஹ்மத்-18870, தாரிமீ-1397, நஸாயீ-889, 1268, குப்ரா நஸாயீ-965, 1192, இப்னு குஸைமா-714, இப்னு ஹிப்பான்-1860, அல்முஃஜமுல் கபீர்-82, குப்ரா பைஹகீ-2787, …
ஸாயிதா பின் குதாமா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் மாணவர்களின் பல தரப்பட்ட அறிவிப்புகள்:
…
ஆஸிம் பின் குலைப் அவர்களிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்கும் செய்திகள்:
1 . அபுல்அஹ்வஸ்-ஸல்லாம் பின் ஸுலைம்
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1113,
2 . ஸுஃப்யான் ஸவ்ரீ
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2522, அஹ்மத்-18858, 18871,
3 . ஸுஃப்யான் பின் உயைனா
பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-909, நஸாயீ-1159, 1263,
- முஸ்னத் ஹுமைதீ-909.
مسند الحميدي (2/ 136)
909 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا عَاصِمُ بْنُ كُلَيْبٍ الْجَرْمِيُّ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: سَمِعْتُ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَكَعَ وَبَعْدَ مَا يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَرَأَيْتُهُ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ أَضْجَعَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى، وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى، وَبَسَطَهَا، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ ثِنْتَيْنِ وَحَلَّقَ حَلَقَةً وَدَعَا هَكَذَا» وَنَصَبَ الْحُمَيْدِيُّ السَّبَّابَةَ، قَالَ وَائِلٌ: «ثُمَّ أَتَيْتُهُمْ فِي الشِّتَاءِ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ»
4 . அப்துல்லாஹ் பின் இத்ரீஸ்
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8442, 29679, இப்னு மாஜா-912, இப்னு குஸைமா-713,
5 . அப்துல்வாஹித்,
பார்க்க: அஹ்மத்-18850, குப்ரா பைஹகீ-2516,
6 . ஷுஅபா
பார்க்க: அஹ்மத்-18855, 18877, இப்னு குஸைமா-697, 698,
7 . ஸுஹைர் பின் முஆவியா
பார்க்க: அஹ்மத்-18876,
8 . பிஷ்ர் பின் முஃபள்ளல்
பார்க்க: அபூதாவூத்-726, 957, முஸ்னத் பஸ்ஸார்-4485, நஸாயீ-1265,
9 . காலித் பின் அப்துல்லாஹ் அத்தஹ்ஹான்
பார்க்க: குப்ரா பைஹகீ-2784,
10 . முஹம்மத் பின் ஃபுளைல்
பார்க்க: இப்னு குஸைமா-713,
(11 . ஃகைலான் பின் ஜாமிஃ, 12. அபூஅவானா,
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-17584 (88), குப்ரா பைஹகீ-2516)
…………
ஆய்வுக்காக:
2 . அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற செய்தி சரியா?.
3 . விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு.
4 . هل يحرك السبابة عند رفعها في تشهد الصلاة؟.
இஷாரா செய்தல் பற்றி வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அல்லாத வேறு சில நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1014.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-736, 737,
அழைப்பது போல் என்று வரும் ஹதீஸ் எண்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا – இந்த ஹதீஸிலேயே இந்த வாசகம் உள்ளது.