வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுகிறார்கள் என்பதை நான் (கவனமாக) பார்ப்பேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன்.
“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) நின்றார்கள். கிப்லாவை முன்னோக்கித் தக்பீர் கூறினார்கள். பிறகு தமது இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்தினார்கள். பின்னர் தமது இடது கையை தமது வலது கையால் பிடித்தார்கள். ருகூஃ செய்ய நாடியபோது அவ்வாறே (கைகளை) உயர்த்தினார்கள். பிறகு தமது இரு கைகளையும் தமது முழங்கால்களின் மீது வைத்தார்கள். ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோது அவ்வாறே (கைகளை) உயர்த்தினார்கள். பிறகு சஜ்தா செய்தபோது தமது இரு கைகளுக்குமிடையே தமது தலையை அந்த இடத்தில் வைத்தார்கள். பின்னர் அமர்ந்தார்கள். தமது இடது காலை விரித்து, தமது இடது கையை தமது இடது தொடையின் மீது வைத்தார்கள். தமது வலது முழங்கையை தமது வலது தொடையின் மீது ஊன்றினார்கள். இரண்டு விரல்களை மடக்கிக் கொண்டு ஒரு வளையம் போல் ஆக்கினார்கள்.”
(இதைக் கூறிய) பிஷ்ர் என்பவர் தமது கட்டை விரலையும் நடு விரலையும் வளையம் போல் ஆக்கி சுட்டு விரலால் சைகை செய்து, “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த்தேன்” என்று கூறினார்.
….
(அபூதாவூத்: 726)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ:
قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي، قَالَ: فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ، ثُمَّ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا، مِثْلَ ذَلِكَ فَلَمَّا سَجَدَ وَضَعَ رَأْسَهُ بِذَلِكَ الْمَنْزِلِ مِنْ بَيْنِ يَدَيْهِ، ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَحَدَّ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ ثِنْتَيْنِ وَحَلَّقَ حَلْقَةً» وَرَأَيْتُهُ يَقُولُ: هَكَذَا وَحَلَّقَ بِشْرٌ الْإِبْهَامَ وَالْوُسْطَى وَأَشَارَ بِالسَّبَّابَةِ،
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-624.
Abu-Dawood-Shamila-726.
Abu-Dawood-Alamiah-624.
Abu-Dawood-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
சமீப விமர்சனங்கள்