தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21967

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர்கள் இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன் என்று ஹுல்ப் அத்தாயீ (ரலி) அறிவிக்கிறார்.

யஹ்யா என்ற அறிவிப்பாளர் இதைத் தமது நெஞ்சின் மீது என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக் காட்டினார்.

(முஸ்னது அஹ்மத்: 21967)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي سِمَاكٌ، عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ:

«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ، وَرَأَيْتُهُ، قَالَ، يَضَعُ هَذِهِ عَلَى صَدْرِهِ»

وَصَفَّ يَحْيَى: الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَوْقَ الْمِفْصَلِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20961.
Musnad-Ahmad-Shamila-21967.
Musnad-Ahmad-Alamiah-20961.
Musnad-Ahmad-JawamiulKalim-21404.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்.

2 . யஹ்யா பின் ஸயீத்.

3 . ஸுஃப்யான் ஸவ்ரீ.

4 . ஸிமாக் பின் ஹர்ப்.

5 . கபீஸா பின் ஹுல்ப்.

6 . ஹுல்ப் அத்தாஈ (யஸீத் பின் அதீ-ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34189-கபீஸா பின் ஹுல்ப் அவர்களைப் பற்றி இமாம் நஸயீ, இப்னுல் மதீனி ஆகியோர், இவர் யாரென்று அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
  • இவர்கள் அறிவில்லையென்றாலும் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் இவரைப் பற்றி அறிந்து இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.

ஒருவரைப் பற்றி சிலர் அறியப்படாதவர் என்று கூறியிருந்து மற்றவர்கள் அவரைப் பற்றி பலமானவர் என்றோ வேறு தகவலையோ கூறியிருந்தால் விவரம் கூறியவர்களின் கருத்தே ஏற்கப்படும் என்பது ஹதீஸ்கலையில் உள்ள விதியாகும்.


அறியப்படாதவருக்கான இலக்கணம்

  1. ஒரு அறிவிப்பாளர் பற்றி எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவர் வழியாக ஒரேயொரு அறிவிப்பாளர் தான் அறிவித்துள்ளார் என்றால் அத்தகைய அறிவிப்பாளர், அறியப்படாதவர் என்ற நிலையில் வைக்கப்படுவார்.

இந்த அளவுகோலின் அடிப்படையில் கபீஸா என்பவர் வழியாக பல ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஹதீஸ்கள் அனைத்தையுமே ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் தான் அறிவிக்கிறார்.

2. அறிவிப்பாளரை எடை போடும் அறிஞர்கள் யாராவது ஒருவரோ, பலரோ நம்பகமானவர் என்று ஒருவரைப் பற்றி முடிவு செய்திருந்தால் அப்போது அவர் வழியாகக் குறைந்தது இரண்டு பேர் அறிவித்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

கபீஸாவை இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஆகிய அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் யாரையாவது நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
  • யாரைப் பற்றி எந்த அறிஞரும் குறை கூறவில்லையோ அவர்கள் நம்பகமானவர்கள் என்பது இப்னு ஹிப்பானின் அடிப்படை விதி.
  • யாரெனத் தெரியாதவரையும் நம்பகமானவர் என்று கூறும் எந்த விதியையும் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
  • யாரைப் பற்றி நம்பகமானவர் என்பதற்கான ஆதாரம் கிடைக்கிறதோ அவரைத் தான் நம்பகமானவர் என்று கூறுவார். அந்த வகையில் இவருக்கும் இப்னு ஹிப்பானுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

எனவே கபீஸா என்பவர் வழியாக ஸிமாக் பின் ஹர்ப் மட்டுமே அறிவித்திருந்தாலும், இவரது நம்பகத்தன்மையை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்கள் உறுதி செய்திருப்பதால், யாரென அறியப்படாதவர் என்ற விமர்சன வட்டத்திற்குள் இவர் வர மாட்டார்.


ஸிமாக் பின் ஹர்ப்

  • கபீஸாவிடமிருந்து அறிவிக்கும் ஸிமாக் அவர்கள் பற்றி பாராட்டியும், குறை கூறியும் இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளன.
  • காரணம் இவர் தனது முதுமைக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அதனால் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். அந்த நேரத்தில் இவரைக் கண்டவர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.
  • முதுமைக்கு முந்தைய காலத்தில் மிகச் சரியாக அறிவிப்பவராக இருந்தார். அந்த நிலையில் இவரைக் கண்டவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.
  1. ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    போன்றவர்கள் ஸிமாக் மூளை குழம்புவதற்கு முன்னர் அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் ஆவர். மூளை குழம்பிய பின்னர் அவரிடம் எதையும் கேட்டதில்லை. எனவே இவர்கள் ஸிமாக் வழியாக அறிவித்தால் அவை ஆதாரப்பூர்வமானது.
  2. இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகளை குளறுபடியாக அறிவித்துள்ளார் என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் விமர்சித்துள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-2579 (12/115), தக்ரீபுத் தஹ்தீப்-1/415)

இந்தச் செய்தியை ஸிமாக் அவர்கள், இக்ரிமாவிடமிருந்து அறிவிக்கவில்லை என்பது தனி விசயம்.


ஸிமாக் அவர்கள், இக்ரிமா (ரஹ்) வழியாக அறிவிக்கும் செய்திகள் பற்றிய விளக்கம்:

1 . ஸிமாக் அவர்கள், இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தனித்து அறிவிக்கும் செய்திகள்.

இவைகள் பெரும்பாலும் முன்கராக இருக்கும். இவை பலவீனமானவை.

2 . ஸிமாகிடமிருந்து ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ, அபுல்அஹ்வஸ் ஆகியோர் ஸிமாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகள்.

இதில் வரும் செய்திகளை ஆய்வு செய்யவேண்டும். ஆய்வில் சிலவை சரியாகவும் இருக்கலாம். சிலவை பலவீனமாகவும் இருக்கலாம்.

3 . ஸிமாக் அவர்கள், இக்ரிமாவிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாத நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் செய்திகள்.

இதில் வரும் செய்திகள் பெரும்பாலும் சரியானவை. இவைகளை தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற பலர் சரியானது என்று கூறியுள்ளனர்.

இந்தத் தகவலை அப்துல்அஸீஸ் தரீஃபீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: ஷரஹ் புலூஃகுல் மராம்-50)

ஸிமாக் அவர்கள் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியதற்கு காரணம் உள்ளது. இவரிடமிருந்து ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஆகியோர் சில செய்திகளை இக்ரிமாவுடன் நிறுத்தியுள்ளார்கள். அதாவது நபித்தோழரைக் குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார்கள். அபுல்அஹ்வஸ், இஸ்ராயீல் ஆகியோர் ஸிமாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்று அறிவித்துள்ளார்கள். எனவே சிலர் முர்ஸலாகவும் சிலர் முத்தஸிலாகவும் அறிவிப்பதால் தான் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலை இல்லாத செய்திகள் சரியானவையாகும்.

இந்த தகவலைப் போன்றே மற்றொரு தகவலை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் கூறியுள்ளதை அவர் மகன் வழியாக கதீப் பஃக்தாதீ பதிவு செய்துள்ளார்.

تاريخ مدينة السلام للخطيب البغدادي (10/ 298)
أخبرنا حمزة بن محمد بن طاهر، قال: حَدثنا الوليد بن بكر، قال: حَدثنا عَليّ بن أَحمد بن زكريا الهاشمي، قال: حَدثنا أَبو مسلم صالح بن أَحمد بن عَبد الله العجلي، قال: حَدثني أبي قال: وسماك بن حرب بكري جائز الحديث إلا أنه كان في حديث عكرمة ربما وصل الشيء، عن ابن عباس وربما، قال: قال رسولُ الله صَلى الله عَليهِ وسلمَ وإنما كان عكرمة يحدث، عن ابن عباس، وَكان سفيان الثوري يضعفه بعض الضعف، وَكان جائز الحديث لم يترك حديثه أحد، وَكان عالما بالشعر وأيام الناس، وَكان فصيحا.

ஸிமாக் பின் ஹர்ப் சுமாரானவர். என்றாலும் இவர், இக்ரிமா அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவித்த சில செய்திகளை இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். எனவே தான் சில செய்திகளில் இவரை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
பலவீனமானவர் என்று கூறியுள்ளார்…

(நூல்: தாரீகு மதீனதுஸ் ஸலாம்-10/298)


இது ஷாத்தான செய்தியா?

நெஞ்சின் மீது கை வைக்க வேண்டும் என்று அறிவிக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அறிவிப்பில் ஸிமாக் என்பவரிடமிருந்து ஸுஃப்யான், அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோர் அறிவிக்கின்றனர்.

  • இதில் அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோரின் அறிவிப்புக்களில், இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள் என்று மட்டும் தான் இடம் பெற்றுள்ளது.
  • ஸுஃப்யான் அவர்களின் அறிவிப்பில் மட்டும் நெஞ்சின் மீது என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. இதைப் போன்று ஸுஃப்யானிடமிருந்து யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    வகீஃ ஆகிய இருவர் அறிவிக்கின்றனர். இதில் வகீஃ என்பவரின் அறிவிப்பில், நெஞ்சின் மீது என்ற வாசகம் இல்லை.

ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவித்து, எல்லா மாணவர்களும் நம்பகத்தன்மையில் சமமாக இருந்து, ஒருவர் மற்ற ஏனைய மாணவர்களின் அறிவிப்புகளுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியை ஷாத் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தி என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இதைப் போன்று நம்பகமான ஒரு அறிவிப்பாளர், அவரை விடக் கூடுதல் நம்பகத்தன்மை உள்ள ஒருவருக்கு முரணாக அறிவித்தால் நம்பகத்தன்மை குறைவாக உள்ளவரின் அறிவிப்பை ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்றும் சொல்வர்.

இந்தச் செய்தியும் ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று சிலர் கூறுகின்றனர். இது கவனமின்மையின் வெளிப்பாடாகும்.

ஒருவரின் அறிவிப்பில் வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள் என்றும், மற்றொரு அறிவிப்பாளரின் செய்தியில், வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சில் வைத்தார்கள் என்றும் இடம் பெறுவது முந்தைய செய்திக்கு முரணானது அல்ல. தேவையான கூடுதல் விளக்கம் தான் இதில் இடம் பெற்றுள்ளது.

ஒருவரின் அறிவிப்பில், வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள் என்றும், இன்னொருவரின் அறிவிப்பில், இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள் என்று அறிவித்திருந்தால் அதை முரண்பாடு என்று சொல்லலாம்.

ஆனால் வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைத்தார்கள் என்பது கூடுதலான செய்தியே தவிர முரணான செய்தி அல்ல. மேலும் இந்தச் செய்தியில் தான் சரியான விளக்கமும் உள்ளது.

வலது கையை இடது கையின் மீது வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை உடலில் எந்த இடத்தில் வைத்தார்கள் என்ற கேள்வி முந்தைய அறிவிப்பின் படி இருந்து கொண்டே இருக்கும். நெஞ்சின் மீது வைத்தார்கள் என்று சொன்னால் தான் அது முழுமை பெற்ற ஹதீஸாக அமையும். ஆகவே நெஞ்சின் மீது வைத்தார்கள் என்பது ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது அல்ல!

  • எனவே நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.
  • இந்த கருத்தில் ஒரு செய்தி, வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் வழியாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

(பார்க்க : இப்னு குஸைமா-479 )


  • தொப்புள் கீழ் கை கட்டுவது பற்றி வரும் செய்தி பலவீனமானது.

பார்க்க: அபூதாவூத்-756 .

கூடுதல் தகவல் பார்க்க: நெஞ்சில் கை கட்டுதல் ஆய்வு .


 

2 comments on Musnad-Ahmad-21967

  1. சுஃப்யான்(ரஹ்) ஸம்மாக் மூளை குழம்புவதற்கு முன்னர் அவரிடம் கேட்டவர்கள் என்று எப்படி கூறுகிறார்கள்? அதற்கு ஆதாரம்?

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      யஃகூப் பின் ஷைபா அவர்கள், ஸிமாக் பின் ஹர்ப், இக்ரிமா வழியாக அறிவிப்பது குளறுபடியானது எனவும், ஷுஃபா, ஸுஃப்யான் போன்றோர் அவரிடமிருந்து அறிவிப்பது சரியானது எனவும் கூறியுள்ளார். ( தஹ்தீபுல் கமால்-2579)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.