நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதை அதிகமாக கூறுங்கள். ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்.
(பொருள் : அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8406)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَزِيدَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8406.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8205.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் யஸீத் பலவீனமானவர். யஸீத் பின் அப்துல் மலிக் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-10736.
சமீப விமர்சனங்கள்