அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு தடவை நான், எனது சின்னம்மாவுடன் நபி (ஸல்) அவர்களைக் காண சென்றேன். எனது சின்னம்மா இரு தங்க காப்புகளை அணிந்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து மறுமையில் நெருப்பாலான இரு தங்க காப்புகள் உனக்கு அணிவிக்கப்படுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கேட்டார்கள்.
உடனே நான் எனது சின்னம்மாவிடம் , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியேற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு, என் சின்னம்மா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்டார்கள். மறுமையில் நெருப்பாலான இரு தங்க காப்புகள் உனக்கு அணிவிக்கப்படுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று சொன்னதை கூறினேன்.
உடனே என் சின்னம்மா அவ்விரண்டு தங்கக் காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டார்கள். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.
(முஸ்னது அஹ்மத்: 27604)حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ:
انْطَلَقْتُ مَعَ خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ – أَوْ قَالَتْ: قُلْبَانِ مِنْ ذَهَبٍ – فَقَالَ لِي: «أَيَسُرُّكِ أَنْ يُجْعَلَ فِي يَدِكِ سِوَارَانِ مِنْ نَارٍ؟» فَقُلْتُ لَهَا: يَا خَالَتِي، أَمَا تَسْمَعِينَ مَا يَقُولُ؟ قَالَتْ: وَمَا يَقُولُ؟ قُلْتُ: يَقُولُ: ” أَيَسُرُّكِ أَنْ يُجْعَلَ فِي يَدَيْكِ سِوَارَانِ مِنْ نَارٍ – أَوْ قَالَ: قُلْبَانِ مِنْ نَارٍ -؟، ” قَالَتْ: فَانْتَزَعَتْهُمَا، فَرَمَتْ بِهِمَا، فَلَمْ أَدْرِ أَيُّ النَّاسِ أَخَذَهُمَا؟
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27604.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26944.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- இதே செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வந்துள்ளது:
பார்க்க : நஸாயீ-5142 .
சமீப விமர்சனங்கள்