தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17997

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) கூறியதாவது:

யார் (தனது பிள்ளைகளுக்கு) சிறிதளவேனும் தங்க நகையை அணிவிக்கின்றாரோ அல்லது அணிந்துக் கொள்கிறாரோ அவருக்கு மறுமை நாளில் அந்த நகையால் சூடு போடப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 17997)

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ تَحَلَّى أَوْ حُلِّيَ بِخَر بَصِيصَةٍ مِنْ ذَهَبٍ، كُوِيَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17997.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17638.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம் அல்அஷ்அரீ பற்றி இவர் நபித்தோழரா இல்லையா என்பது பற்றி அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.
  • மேலும் இதில் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : நஸாயீ-5142 .

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.