தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-730

A- A+


ஹதீஸின் தரம்: More Info

யாரேனும் உளூ செய்தபின் “சுப்ஹானல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு அஸ்தஃக்பிருக வ அதூபு இலைக” என்று ஓதினால் அது சீல்(முத்திரை)யிட்டு அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் வைத்துப் பாதுகாக்கப்படும். மறுமை நாள் வரை அதன் சீல் உடைக்கப்படாது. யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ, அவர் ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது அவன் சாட்டப்படமாட்டான். மேலும் அவருக்கு எதிராக அவன் எந்த சதியும் செய்ய முடியாது. மேலும் அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும், என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-730: 730)

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي هَاشِمٍ الْوَاسِطِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ:

مَنْ تَوَضَّأَ، ثُمَّ فَرَغَ مِنْ وُضُوئِهِ فَقَالَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، خُتِمَ عَلَيْهَا بِخَاتَمٍ ثُمَّ وُضِعَتْ تَحْتَ الْعَرْشِ، فَلَمْ تُكْسَرْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ، ثُمَّ أَدْرَكَ الدَّجَّالَ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ وَلَمْ يَكُنْ لَهُ عَلَيْهِ سَبِيلٌ وَرُفِعَ لَهُ نُورٌ مِنْ حَيْثُ يَقْرَأُهَا إِلَى مَكَّةَ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-730.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-704.




  • இந்தச் செய்தி அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இரண்டு முறைகளில் இடம் பெற்றுள்ளது. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவும், மற்றொன்று நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நபித்தோழரின் கூற்று என்பதே சரியனது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • சிலர் இது போன்ற செய்தியை நபித்தோழர் ஆய்வின்படி கூறமுடியாது. எனவே இதுவும் நபி (ஸல்) அவர்களின் சொல்லைப் போன்றுதான் என்று கூறுகின்றனர்…

மேலும் பார்க்க : ஹாகிம்-2072 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.