பாடம் : 46 (ஹஜ்ஜின் போது கல்லெறிய வேண்டிய இடங்களில்) கல்லெறியும் நேரத்தில் மார்க்கத் தீர்ப்புக் கேட்பதும் பதிலளிப்பதும் (செல்லும்).
நபி(ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ரத் என்ற இடத்தில் கேள்வி கேட்கப்பட்டதை கண்டேன். அப்போது ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! நான் (கல்) எறிவதற்கு முன்பே (பிராணியைப்) பலியிட்டு விட்டேன்’ என்றார். அதற்கவர்கள் ‘குற்றமில்லை; இப்போது கல்லெறிந்து விடும்’ என்றார்கள். மற்றொருவர் ‘இறைத்தூதர் அவர்களே! நான் பிராணியைப் பலியிடுவதற்கு முன்பே மொட்டையடித்து விட்டேன்’ என்றார். அதற்கவர்கள், ‘அதனால் குற்றமில்லை; பலியிட்டுவிடும்’ என்றார்கள்.
(இது போன்ற செயல்களை) முந்தியோ பிந்தியோ செய்யப்பட்டுவிட்டதாக அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ‘குற்றமில்லை; இப்போது செய்து கொள்ளுங்கள்’ என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்’ அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 3
بَابُ السُّؤَالِ وَالْفُتْيَا عِنْدَ رَمْيِ الْجِمَارِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ
رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ الجَمْرَةِ وَهُوَ يُسْأَلُ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ قَالَ: «ارْمِ وَلاَ حَرَجَ»، قَالَ آخَرُ: يَا رَسُولَ اللَّهِ، حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ؟ قَالَ: «انْحَرْ وَلاَ حَرَجَ». فَمَا سُئِلَ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلَّا قَالَ: «افْعَلْ وَلاَ حَرَجَ»
சமீப விமர்சனங்கள்