தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-123

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 45 அமர்ந்திருக்கும் அறிஞரிடம் நின்று கொண்டு கேள்வி கேட்பது. 

123. ‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?’ என்று கேட்டார்.

உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, ‘அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்’ என்று கூறினார்கள். கேள்வி கேட்டவர் நின்றிருந்ததால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்’ என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book : 3


بَابُ مَنْ سَأَلَ وَهُوَ قَائِمٌ عَالِمًا جَالِسًا

حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ ، مَا القِتَالُ فِي سَبِيلِ اللَّهِ؟ فَإِنَّ أَحَدَنَا يُقَاتِلُ غَضَبًا، وَيُقَاتِلُ حَمِيَّةً، فَرَفَعَ إِلَيْهِ رَأْسَهُ، قَالَ: وَمَا رَفَعَ إِلَيْهِ رَأْسَهُ إِلَّا أَنَّهُ كَانَ قَائِمًا، فَقَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ»


Bukhari-Tamil-123.
Bukhari-TamilMisc-123.
Bukhari-Shamila-123.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

உஸ்மான் பின் அபூஷைபா-அல்அபஸீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஜரீர் பின் அப்துல்ஹமீத்

ஜரீர் பின் அப்துல்ஹமீத்-அர்ராஸீ (ரஹ்) – Jarir bin 'Abdul Hameed al-Razi

இறப்பு: ஹிஜ்ரி 188, ரய்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஜரீர் பின் அப்துல்ஹமீத் பின் ஜரீர் பின் குர்த்

தந்தை பெயர்: அப்துல்ஹமீத் பின் ஜரீர் பின் குர்த்

வம்சம்: அத்தப்பீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, ரய்

பிறப்பு: ஹிஜ்ரி 107, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 188, ரய்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஜரீர் பின் அப்துல்ஹமீத் பின் ஜரீர் பின் குர்த் ரஹ் அவர்கள் ஒரு மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர் மற்றும் நீதிபதி ஆவார். இவர் ஹிஜ்ரி 107 ஆம் ஆண்டு கூஃபாவில் பிறந்தார். கூஃபாவில் வளர்ந்து, பின்னர் ரய் நகரில் குடியேறினார்.

ஹிஜ்ரி 188 ஆம் ஆண்டு ரய் நகரில் மரணமடைந்தார். இவர் பல அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல்மலிக் பின் உமைர், சுலைமான் பின் அபீ சுலைமான், யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, சுலைமான் பின் தர்கான் அத்தைமீ, சுலைமான் அல்அஃமஷ், ஆஸிம் அல்அஹ்வல், ஸுஹைல் பின் அபூஸாலிஹ், அப்துல்அஸீஸ் பின் ரஃபீஃ, அம்மாரா பின் அல்கஃகாஃ, இஸ்மாயீல் பின் அபீ காலித், மன்சூர் பின் அல்மஃதமர், அல்முகீரா பின் மக்ஸம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இஸ்ஹாக் பின் ராஹவைஹ், அபூபக்ர் பின் அபீ ஷைபா, குதைபா பின் ஸயீத், அலீ பின் அல்மதீனீ, யஹ்யா பின் மயீன், யஹ்யா பின் யஹ்யா, யூசுஃப் பின் மூஸா அல்கத்தான், அலீ பின் ஹுஜ்ர், அஹ்மத் பின் ஹன்பல், உஸ்மான் பின் அபீ ஷைபா, முஹம்மத் பின் குதாமா பின் அஃயன், இப்ராஹீம் பின் மூஸா அல்ஃபர்ரா

வேறு பெயர்கள்: ஜரீர்


ஆதாரம்: muslimscholars.info (20028) · Should verify

மன்ஸுர் பின் முஃதமீர்-அஸ்ஸலமீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஷகீக் பின் ஸலமா-அபூவாஇல்

شقيق بن سلمة الأسدي

இறப்பு: ஹிஜ்ரி 100

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஷகீக் பின் ஸலமா

தந்தை பெயர்: ஸலமா

வம்சம்: அல்அஸதீ

புனைப்பெயர்: அபூவாயில்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரி 1

இறப்பு: ஹிஜ்ரி 100

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அபூவாயில் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். அவர் ஹிஜ்ரி 1ல் பிறந்தார். அவர் நபி (ஸல்) அவர்களை அடைந்தவர், ஆனால் அவர்களைப் பார்க்கவில்லை.

அவர் கூஃபாவில் வசித்தார் மற்றும் வணக்கசாலிகளில் ஒருவராக இருந்தார். அவர் ஹிஜ்ரி 100ல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூபக்ர் அஸ்ஸித்தீக் ரலி, உமர் பின் கத்தாப் ரலி, உஸ்மான் பின் அஃப்பான் ரலி, அலீ பின் அபூதாலிப் ரலி, முஆத் பின் ஜபல் ரலி, ஸஃத் பின் அபூவக்காஸ் ரலி, ஹுதைஃபா பின் அல்யமான் ரலி, இப்னு மஸ்ஊத் ரலி, ஸஹ்ல் பின் ஹுனைஃப் ரலி, கப்பாப் பின் அல்அரத் ரலி, கஅப் பின் உஜ்ரா ரலி, அபூமஸ்ஊத் அல் பத்ரீ ரலி

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் அல்அஃமஷ், மன்சூர் பின் அல்மஃதமர், ஸுபைத் பின் அல்ஹாரிஸ், ஜாமிஉ பின் அபூராஷித், ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான், ஹபீப் பின் அபூதாபித், ஆஸிம் பின் அபூஅந்நஜூத், அப்தா பின் அபூலுபாபா, அம்ர் பின் முர்ரா, உஸ்மான் பின் ஆஸிம், அல்முகீரா பின் மக்ஸம், நுஐம் பின் அபூஹிந்த்

வேறு பெயர்கள்: ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ


ஆதாரம்: muslimscholars.info (11353) · Should verify

அபூமூஸா அல்அஷ்அரீ-அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.