தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1746

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வித்ரில் நான் ஓதவேண்டிய குனூத் வார்த்தைகளை எனக்கு கற்று தந்து அதை கூறசொன்னார்கள்.

(அவைகள்) அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த, வபாரிக்லீ ஃபீமா அஃதைத, வதவல்லனீ பீமன் தவல்லைத்த, வகினீ ஷர்ர மா களைத்த. ஃப இன்னக்க தக்லீ வலா யுக்லா அலைக்க. வ இன்னஹு ல யதில்லு மவ்வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த, வ ஸல்லல்லாஹு அலன் நபிய்யி முஹம்மத்..(ஸல்) 

(பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!)

(நஸாயி: 1746)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ، عَنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ قَالَ:

عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ فِي الْوِتْرِ قَالَ: ” قُلْ: اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ، وَصَلَّى اللَّهُ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1746.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1736.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்ராவீ-25112-ஹுஸைன் (ரலி) அவர்களின் பேரரான அப்துல்லாஹ் பின் அலீ அவர்கள், ஹஸன் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். (காரணம் ஹஸன் (ரலி) அவர்கள் மரணித்த சமயம் அப்துல்லாஹ் பின் அலீ அவர்களின் தந்தையான அலீ பின் ஹுஸைன் அவர்கள், பருவ வயதைக்கூட அடையவில்லை. எனவே அப்துல்லாஹ் பின் அலீ அவர்கள், ஹஸன் அவர்களை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்)

(நூல்: அத்தல்கீஸ்-1/446)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.