தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-464

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

வித்ருத் தொழுகையின் குனூத் துஆ பற்றி வந்துள்ளவை.

ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வித்ரில் நான் ஓதவேண்டிய வார்த்தைகளை எனக்கு கற்று தந்தார்கள். (அவைகள்)

அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த, வ ஆஃபினீ பீமன் ஆஃபைத்த. வதவல்லனீ பீமன் தவல்லைத்த. வபாரிக்லீ ஃபீமா அஃதைத, வகினீ ஷர்ர மா களைத்த. ஃப இன்னக்க தக்லீ வலா யுக்லா அலைக்க. வ இன்னஹு லா யதிள்ளு மவ்வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.

(பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன்.)

அறிவிப்பவர்: அபுல் ஹவ்ரா (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளின் செய்தி அலீ (ரலி) வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். ரபீஆ பின் ஷைபான் என்ற பெயர்கொண்ட அபுல்ஹவ்ரா அஸ்ஸஃதிய்யி என்பவரின் வழியாகவே இந்த செய்தியை நாம் அறிகிறோம். வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் செய்திகளில் இந்த செய்தியை விட அழகான செய்தியை நாம் அறியவில்லை.

வருடம் முழுவதும் வித்ருத்தொழுகையில் குனூத் ஓதலாம் என்றும், குனூதை ருகூஃ செய்வதற்கு முன்பு ஓதவேண்டும் என்றும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கருதுகிறார். இதுவே சில கல்வியாளர்கள், ஸுஃப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, கூஃபாவாசிகள் ஆகியோரின் கருத்துமாகும்.

அலீ (ரலி) அவர்கள், ரமலானின் இரண்டாவது பகுதியில் தான் குனூத் ஓதுவார்கள் என்றும், குனூத் துஆவை ருகூஃ செய்த பின்பு ஓதுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே சில கல்வியாளர்கள், ஷாஃபி இமாம், அஹ்மத் இமாம் ஆகியோரின் கருத்துமாகும்.

(திர்மதி: 464)

بَابُ مَا جَاءَ فِي القُنُوتِ فِي الوِتْرِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الحَوْرَاءِ، قَالَ: قَالَ الحَسَنُ بْنُ عَلِيٍّ

عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الوِتْرِ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»

وَفِي البَابِ عَنْ عَلِيٍّ. هَذَا حَدِيثٌ حَسَنٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ أَبِي الحَوْرَاءِ السَّعْدِيِّ وَاسْمُهُ رَبِيعَةُ بْنُ شَيْبَانَ، وَلَا نَعْرِفُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي القُنُوتِ فِي الوِتْرِ شَيْئًا أَحْسَنَ مِنْ هَذَا. وَاخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي القُنُوتِ فِي الوِتْرِ. فَرَأَى عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ القُنُوتَ فِي الوِتْرِ فِي السَّنَةِ كُلِّهَا، وَاخْتَارَ القُنُوتَ قَبْلَ الرُّكُوعِ، وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ العِلْمِ، وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ، وَابْنُ المُبَارَكِ، وَإِسْحَاقُ، وَأَهْلُ الكُوفَةِ، وَقَدْ رُوِيَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ كَانَ لَا يَقْنُتُ إِلَّا فِي النِّصْفِ الآخِرِ مِنْ رَمَضَانَ، وَكَانَ يَقْنُتُ بَعْدَ الرُّكُوعِ. وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ العِلْمِ إِلَى هَذَا، وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ، وَأَحْمَدُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-426.
Tirmidhi-Shamila-464.
Tirmidhi-Alamiah-426.
Tirmidhi-JawamiulKalim-426.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார்.
  • இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
  • மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 121/130
    அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
    இறப்பு ஹிஜ்ரி 310
    வயது: 86
    அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 338
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)

  • என்றாலும் இந்த செய்தியை புரைத் பின் அபூமர்யம் அவர்களிடமிருந்து அபூஇஸ்ஹாக் அவர்களின் மகன் யூனுஸ் என்பவரும் அறிவித்துள்ளார். அபூஇஸ்ஹாக் அவர்கள் அறிவிக்கும் செய்தியை யூனுஸ் அவர்களும் அறிவித்தால் இருவரும் அந்த ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவிக்கும் செய்தி தான் என்று நம்முடைய ஆசிரியர்களில் சிலர் கூறியுள்ளனர் என இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (ஸஹீஹ் இப்னு குஸைமா-1096, 2/152)…

(இந்தப் பிரார்த்தனையை வித்ருத் தொழுகையில் ஓதவேண்டும் என்ற கருத்தில் வந்துள்ள செய்திகளில் விமர்சனம் இருப்பதாகக் கூறி சில அறிஞர்கள் வித்ருத் தொழுகையில் இந்த பிரார்த்தனையும், வேறு எந்தப்பிரார்த்தனையும் இல்லை என்று கூறுகின்றனர்.

புரைத் பின் அபூமர்யம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஃபா அவர்களின் அறிவிப்பில் வித்ருத் தொழுகையில் ஓதவேண்டிய பிரார்த்தனை என்பது இடம்பெறவில்லை. இவர் மிகவும் நினைவாற்றல் உள்ளவர் என்பதால் தான் சில அறிஞர்கள் இவர் அறிவிக்கும் செய்திக்கு முன்னுரிமை தந்து மற்றவர்கள் அறிவிக்கும் செய்தியை ஷாத் என்று கூறுகின்றனர்)

  • வேறு சில அறிஞர்கள், மேற்கண்ட செய்தியின் விசயத்தில் கூறப்படும் விமர்சனங்களுக்கும், குறைப்பாடுகளுக்கும் பதில் கூறி இந்த செய்தியை சரியானது என்று கூறுகின்றனர்…
  • இந்த முழு செய்தியை ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் பலவாறு அறிவித்துள்ளனர். அதாவது இந்த செய்தியை சிலர் சுருக்கமாகவும் சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் வித்ரில் ஓதவேண்டிய துஆ என்றும் அறிவித்துள்ளனர். சிலர் அதைக் கூறாமலும் அறிவித்துள்ளனர். எனவே இதை வைத்து துஆ என்ற வார்த்தை தான் சரியானது; வித்ரின் குனூத் என்ற வார்த்தை தவறானது என்பதை உறுதியாகக் கூறமுடியாது.
  • மேலும் புரைத் பின் மர்யம் அவர்களிடமிருந்து ஹஸன் பின் உபைதுல்லாஹ் என்பவரும் அபூஇஸ்ஹாக், யூனுஸ் ஆகியோரைப் போன்று அறிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியில் (ஷுஃபா அவர்களின் ஆசிரியரான) புரைத் அவர்கள், இதைப் பற்றி நான் முஹம்மது பின் அலீ அவர்களிடம் கூறியபோது அவர், அபுல்ஹவ்ரா உண்மையே கூறினார். இந்த துஆவை நாங்கள் வித்ரின் குனூதில் ஓத  ஹஸன் (ரலி) எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார் என்பதால் இந்த துஆ வித்ரின் குனூத் துஆ என்றே முடிவு செய்யலாம்.

வித்ரில் குனூத் துஆ.
  • அத்துர்ரிய்யதுத் தாஹிரா-135.

«الذرية الطاهرة للدولابي» (ص80):

135 – حدثني الفضل بن العباس أبو العباس الحلبي، حدثنا أبو صالح الفراء، حدثنا أبو إسحاق الفزاري، عن الحسن بن عبيد الله، عن بريد بن أبي مريم، عن أبي الحوراء، قال: قلت للحسن بن علي: مثل من كنت في عهد رسول الله صلى الله عليه وسلم وماذا عقلت عنه؟ قال: عقلت عنه أني سمعت رجلا يسأل رسول الله صلى الله عليه وسلم فسمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «دع ما يريبك إلى مالا يريبك ‌فإن ‌الشر ‌ريبة ‌والخير ‌طمأنينة» وعقلت عنه الصلوات الخمس وكلمات علمنيهن قال: ” قل: اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت ”

قال بريد بن أبي مريم: فدخلت على محمد بن علي في الشعب فحدثته بهذا الحديث عن أبي الحوراء فقال: صدق هن كلمات علمناهن يقولهن في القنوت

புரைத் பின் அபூமர்யம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஹம்மது பின் அலீ (பின் ஹுஸைன்) அவர்கள் ஒரு கணவாயில் இருந்த போது அவரிடம் நான் சென்றேன். அப்போது நான், அபுல் ஹவ்ரா அவர்கள் எனக்கு அறிவித்த இந்தச் செய்தி பற்றி அவர்களிடம் கூறியபோது அவர், அபுல்ஹவ்ரா உண்மையே கூறினார். இந்த துஆவை நாங்கள் வித்ரின் குனூதில் ஓதுவதற்கு ஹஸன் (ரலி) அவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறினார்.
(குறிப்பு: علمناهن يقولهن في القنوت என்ற அரபி வாசகம் علمناهن نقولهن في القنوت என்று இருப்பதே சரியாகும்)

(பார்க்க: 2 . வித்ரில் குனூத் துஆ)


1 . இந்தக் கருத்தில் ஹஸன் பின் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹஸன் பின் உமாரா —> புரைத் பின் அபூமர்யம் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4984 , அல்முஃஜமுல் கபீர்-2711 ,

  • அபூஇஸ்ஹாக் —> புரைத் பின் அபூமர்யம் —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4985 , அஹ்மத்-1721 ,

  • அபூஇஸ்ஹாக் —> புரைத் பின் அபூமர்யம் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: தாரிமீ-16331634 , இப்னு மாஜா-1178 , அபூதாவூத்-14251426 , திர்மிதீ-464 , நஸாயீ-1745 , முஸ்னத் பஸ்ஸார்-13376786 , குப்ரா நஸாயீ-1446 , முஸ்னத் அபீ யஃலா-6765 ,

..அல்முஃஜமுல் கபீர்-2703 , 2704 , 2705 , 2706 ,

குப்ரா பைஹகீ-3138 ,

  • யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் —> புரைத் பின் அபூமர்யம் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: அஹ்மத்-1718 , அல்முஃஜமுல் கபீர்-2712 ,

  • இஸ்ராயீல் பின் அபூஇஸ்ஹாக் —> அபூஇஸ்ஹாக் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் (அல்லது) ஹுஸைன் பின் அலீ (ரலி) 

பார்க்க: இப்னு குஸைமா-1095 , அல்முஃஜமுல் கபீர்-2702 , குப்ரா பைஹகீ-3138 ,

  • ஹஸன் பின் உபைதுல்லாஹ் —> புரைத் பின் அபூமர்யம் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: அத்துர்ரிய்யதுத் தாஹிரா-135 .

  • அல்அலா —> புரைத் பின் அபூமர்யம் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: அஹ்மத்-1725 , அல்முஃஜமுல் கபீர்-2714 , குப்ரா பைஹகீ-3139 ,

..அல்முஃஜமுல் கபீர்-2709 ,

  • ஷுஃபா —> புரைத் பின் அபூமர்யம் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: அஹ்மத்- 17231727 , தாரிமீ-1632 , 2574 , திர்மிதீ-2518 , நஸாயீ-5711 , குப்ரா நஸாயீ-5201 , முஸ்னத் அபீ யஃலா-6759 , 6762 , இப்னு குஸைமா-1096 , 23472348 , இப்னு ஹிப்பான்-722945 ,

…..முஸ்னத் தயாலிஸீ-1273 , 1274 , 1275 , அல்முஃஜமுல் கபீர்-2710 ,

  • அம்ர் பின் மர்ஸூக் —> ஷுஃபா —> புரைத் பின் அபூமர்யம் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-2707 ,

  • ஸாபித் பின் உமாரா —> ரபீஆ பின் ஷைபான் —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: அஹ்மத்-1724 , முஸ்னத் பஸ்ஸார்-1338 , இப்னு குஸைமா-2349 , அல்முஃஜமுல் கபீர்-2741 ,

  • மூஸா பின் உக்பா —> அப்துல்லாஹ் பின் அலீ பின் ஹுஸைன் —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: நஸாயீ-1746 , குப்ரா நஸாயீ-1447 ,

  • இஸ்மாயீல் பின் இப்ராஹீம் —> மூஸா பின் உக்பா —> ஹிஷாம் —> உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) —> ஹஸன் பின் அலீ (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-2700 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3887 , ஹாகிம்-4800 , குப்ரா பைஹகீ-4859 ,

  • முஹம்மது பின் ஜஃபர் —> மூஸா பின் உக்பா —> அபூஇஸ்ஹாக் —> அபுல்ஹவ்ரா —> ஹஸன் (அல்லது) ஹுஸைன் பின் அலீ (ரலி) 

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-2701 ,

..அல்முஃஜமுல் கபீர்-2708 ,

அபூயஸீத் —> அபுல்ஹவ்ரா

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-2713 ,

2 . ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-1735 .

3 . இப்னு அப்பாஸ் (ரலி), இப்னுல் ஹனீஃபா …வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4957 .

4 . புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7360 .

5 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ஸைத்-70 ,

முஸ்னத் ஸைத் என்ற நூலின் அறிவிப்பாளர் ராவீ-32243-அம்ர் பின் காலித் அல்வாஸிதீ என்பவர் ஆவார். இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று வகீஃ பின் ஜர்ராஹ், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
போன்ற இன்னும் பல அறிஞர்கள் கூறியுள்ளனர். (ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையுடையவர்கள் தான் இந்த நூலை முக்கிய ஆதாரமாகக் கொள்கின்றனர்). (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/267)

(திர்மிதீ இமாம் இந்த செய்தி அலீ (ரலி) வழியாகவும் வந்துள்ளது என்று குறிப்பிட்டது முஸ்னத் ஸைதில் இடம்பெறும் செய்தியை அல்ல. அபூதாவூதில் இடம்பெறும் செய்தியைப் பற்றியே ஆகும். (பார்க்க: அபூதாவூத்-1427)

ஆய்வுக்காக-தல்கீஸ் , alukah1 , alukah2 , kulalsalafiyeen ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1427 , நஸாயீ-1699 , தாரகுத்னீ-1662 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7885 ,

3 comments on Tirmidhi-464

  1. ஷுஃபா அவர்களின் அறிவிப்பில் வித்ருத் தொழுகையில் ஓதவேண்டிய பிரார்த்தனை என்பது இடம்பெறவில்லை

    இப்னு குஸைமா அவர்கள் ஷுஃபா அவர்களின் அறிவிப்பில் அது துஆ மட்டும்தான் குனூதில் ஓதும் துஆ இல்லை
    என்பதுதான் சரி

    1. ஷுஃபா இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் செய்தி ஷாக் ஆகும்

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.

        இந்த முழு செய்தியை ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் பலவாறு அறிவித்துள்ளனர். அதாவது இந்த செய்தியை சிலர் சுருக்கமாகவும் சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் வித்ரில் ஓதவேண்டிய துஆ என்றும் அறிவித்துள்ளனர். சிலர் அதைக் கூறாமலும் அறிவித்துள்ளனர். எனவே இதை வைத்து துஆ என்ற வார்த்தை தான் சரியானது; வித்ரின் குனூத் என்ற வார்த்தை தவறானது என்பதை உறுதியாகக் கூறமுடியாது.

        மேலும் புரைத் பின் மர்யம் அவர்களிடமிருந்து ஹஸன் பின் உபைதுல்லாஹ் என்பவரும் அபூஇஸ்ஹாக், யூனுஸ் ஆகியோரைப் போன்று அறிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியில் (ஷுஃபா அவர்களின் ஆசிரியரான) புரைத் அவர்கள், இதைப் பற்றி நான் முஹம்மது பின் அலீ அவர்களிடம் கூறியபோது அவர், அபுல்ஹவ்ரா உண்மையே கூறினார். இந்த துஆவை நாங்கள் வித்ரின் குனூதில் ஓத எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார் என்பதால் இந்த துஆ வித்ரின் குனூத் துஆ என்றே முடிவு செய்யலாம்.

        பார்க்க: 2 . வித்ரில் குனூத் துஆ.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.