தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-7885

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத் வித்ர் தொழுவார்கள். ருகூஃ செய்வதற்கு முன் குனூத் துஆ ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 

(almujam-alawsat-7885: 7885)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، نا سَهْلُ بْنُ الْعَبَّاسِ التِّرْمِذِيُّ، نا سَعِيدُ بْنُ سَالِمٍ الْقَدَّاحُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ:

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِثَلَاثِ رَكَعَاتٍ، وَيَجْعَلُ الْقُنُوتَ قَبْلَ الرُّكُوعِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدَيثَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِلَّا سَعِيدُ بْنُ سَالِمٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7885.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-8095.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18723-ஸஹ்ல் பின் அப்பாஸ் அத்திர்மிதீ என்பவர் பற்றி பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். (காரணம் இவரிடமிருந்து மஹ்மூத் பின் முஹம்மத் என்பவர் மட்டும் அறிவித்துள்ளார்)
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்றும், கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-3585, தைலு லிஸானில் மீஸான்-67)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7885 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.