தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-4985

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல் ) அவர்கள், குனூதில் ஓதவேண்டியதை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்று ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபுல்ஹவ்ரா (ரஹ்)

(musannaf-abdur-razzaq-4985: 4985)

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ، عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ أَنْ يَقُولَ فِي الْقُنُوتِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-4985.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-4843.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் யஸீத் பின் அபூமர்யம் என்று இடம்பெற்றிருப்பது தவறாகும். புரைத் பின் அபூமர்யம் என்பதே சரியாகும். இதில் இவருக்கும், ஹஸன் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுல்ஹவ்ரா என்பவர் விடப்பட்டுள்ளார் .
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்கள் வழியாக இவ்வாறு வந்திருக்கும் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் என்று கூறியுள்ளார்.

(நூல்: அத்ராஃபுல் ஃகராஇபி வல்அஃப்ராத்-1958, 1/358)

  • என்றாலும் இது இந்த பிரதியில் ஏற்பட்ட தவறாகும். அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள், புரைத் அவர்களுக்கும், ஹஸன் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுல்ஹவ்ராவை கூறியுள்ளார். பார்க்க: அஹ்மத்-1721)

மேலும் பார்க்க: திர்மிதீ-464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.