தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-4957

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.

(musannaf-abdur-razzaq-4957: 4957)

عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي مَنْ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، وَمُحَمَّدَ بْنَ عَلِيٍّ بِالْخَيْفِ يَقُولَانِ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتُ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ فِي صَلَاةِ الصُّبْحِ، وَفي الْوِتْرِ بِاللَّيْلِ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-4957.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-4812.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் அவர்கள், நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் ஆவார். இந்த செய்தியில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செவியேற்றவர் எனக்கு அறிவித்தார் என்று கூறியுள்ளார். அவரின் விவரம் இதில் தெளிவாக இல்லாவிட்டாலும் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் இதே அறிவிப்பாளர்தொடரை ஹதீஸ் எண்-3140 இல் அறிவிக்கும்போது அந்தச் செய்தியில் இவரின் பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்யாமல் அறிவித்துள்ளார்.
  • அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் நம்பகமானவர். ஆனால் இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின் நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: அத்தல்கீஸ்-1/147)

இதற்கான காரணம்:

1 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்மஜீத் என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார்.

2 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஸஃப்வான் அல்உமவிய்யு என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை அப்துல்லாஹ் பின் ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார். (இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இதைக் குறிப்பிட்டுவிட்டு முதல் வகையே பலமானது என்று கூறியுள்ளார்)

3 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை இப்னு ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார்.

4 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மக்லத் பின் யஸீத், இப்னு ஜுரைஜுக்கும், புரைத் பின் அபூமர்யமுக்கும் இடையில் எவரையும் கூறாமல் அறிவித்துள்ளார். (மக்லத் என்பவர் நம்பகமானவர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார்)

(பார்க்க: குப்ரா பைஹகீ-31403141)

நாம் பார்த்தவரை இப்னு ஜுரைஜுக்கும், புரைத் பின் அபூமர்யமுக்குமிடையில் ஒருவரை கூறப்படும் எல்லா அறிவிப்பாளர்தொடர்களிலும் குறை உள்ளது என்பதால் இதில் வரும் இப்னு ஹுர்முஸ் யார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எனவே முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4957 இல் இடம்பெறும் இந்த செய்தியின் படியே முடிவு செய்யவேண்டும். இதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் யார் என்ற விவரம் இல்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

3 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி), முஹம்மது பின் அலீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4957 , குப்ரா பைஹகீ-31403141 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.