தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-13985

A- A+


ஹதீஸின் தரம்: More Info

இஸ்மாயீல் அஸ்ஸுத்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் தனது மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்களா? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ” எனக்குத் தெரியாது. இப்ராஹீம் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அவர் உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார் என்று பதிலளித்தார்கள்.

மேலும் இஸ்மாயீல் அஸ்ஸுத்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்:

நான், அனஸ் (ரலி) அவர்களிடம், நான் தொழுத பின் வலப்பக்கம் திரும்ப வேண்டுமா? அல்லது இடப்பக்கம் திரும்ப வேண்டுமா? என்றுக் கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) தமது வலப் பக்கம் திரும்புவதை பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

 

(முஸ்னது அஹமது: 13985)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِسْمَاعِيلَ السُّدِّيِّ قَالَ:

سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قُلْتُ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِهِ إِبْرَاهِيمَ؟ قَالَ: «لَا أَدْرِي، رَحْمَةُ اللَّهِ عَلَى إِبْرَاهِيمَ، لَوْ عَاشَ كَانَ صِدِّيقًا نَبِيًّا»

قَالَ: قُلْتُ: كَيْفَ أَنْصَرِفُ إِذَا صَلَّيْتُ عَنْ يَمِينِي، أَوْ عَنْ يَسَارِي؟ قَالَ: «أَمَّا أَنَا فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13985.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-13705.




إسناده حسن رجاله ثقات عدا السدي الكبير وهو صدوق حسن الحديث ، رجاله رجال مسلم

  • இதில் நபி (ஸல்) அவர்கள் தொழுதபின் வலப்பக்கம் திரும்புவார்கள் என்ற செய்தி சரியானது. மற்றவை அனஸ் (ரலி) அவர்களின் சொல்லாகும்.

மேலும் பார்க்க : இப்னு மாஜா-1511 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.