ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 20105)حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ سَمُرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبِيضَ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20105.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19653.
إسناد شديد الضعف فيه علي بن عاصم التميمي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30022-அலீ பின் ஆஸிம் பின் ஸுஹைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர்; அந்த தவறை ஏற்றுக்கொள்ளாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
- சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், முன்கருல் ஹதீஸ் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/173)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர். தவறை ஏற்காமல் பிடிவாதம் கொண்டவர், ஷீயா கொள்கையுடைவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-4792)
மேலும் பார்க்க: திர்மிதீ-2810 .
சமீப விமர்சனங்கள்