தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-8078

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஒரு இறந்த மனிதரைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை, பாவங்களை விட்டு அல்லாஹ் தூய்மைப்படுத்துகிறான்;

இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஸுன்துஸ் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8078)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، ثنا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عَبْدِ اللهِ الشَّامِيِّ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ غَسَّلَ مَيِّتًا، فَكَتَمَ عَلَيْهِ طَهَّرَهُ اللهُ مِنْ ذُنُوبِهِ، فَإِنْ كَفَّنَهُ كَسَاهُ اللهُ مِنَ السُّنْدُسِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8078.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-8000.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ராவீ அபூ ஃகாலிப் பற்றி சிலர் நம்பகமானவர் என்றாலும் தவறிவைப்பவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் காரிஜிய்யாக்களின் ஹதீஸ்களை அறிவிப்பவர் என்றும், இவரின் ஹதீஸ்களை மற்ற பலமான அறிவிப்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தே ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

وقال أبو حاتم : ليس بالقوي
تهذيب التهذيب: (4 / 570)


  • இந்தக் கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.

பார்க்க: ஹாகிம்-1307 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.