தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1307

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு இறந்த மனிதரைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான்;

இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான்.

அவரை அடக்கம் செய்ய (கப்ர்) குழி தோண்டி அதில் அடக்கம் செய்தால் அவர் மறுமை நாளில் எழுப்பப்படும் வரை (ஒருவர் மற்றொருவருக்கு) பூமியில் வசிப்பதற்காக தங்குமிடத்தை ஏற்பாடு செய்ததால் கிடைக்கும் கூலியைப் போன்று அவர் கொடுக்கப்படுவார் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூராஃபிஉ (ரலி)

(ஹாகிம்: 1307)

أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ، بِمَرْوَ، ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ الْفَضْلِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ شُرَحْبِيلَ بْنِ شَرِيكٍ الْمَعَافِرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ اللَّخْمِيِّ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ غَسَّلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غُفِرَ لَهُ أَرْبَعِينَ مَرَّةً، وَمَنْ كَفَّنَ مَيِّتًا كَسَاهُ اللَّهُ مِنَ السُّنْدُسِ، وَإِسْتَبْرَقِ الْجَنَّةِ، وَمَنْ حَفَرَ لِمَيِّتٍ قَبْرًا فَأَجَنَّهُ فِيهِ أُجْرِيَ لَهُ مِنَ الْأَجْرِ كَأَجْرِ مَسْكَنٍ أُسْكِنَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ، وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1307.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1239.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19118-ஷுரஹ்பீல் பின் ஷரீக் பற்றி அபுல் ஃபத்ஹ் அல்அஸ்தீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 374
    அவர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார். ஆனால் அபுல் ஃபத்ஹ் அல்அஸ்தீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 374
    அவரே விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இவரின் விமர்சனத்தை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
  • அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் நம்பகமானவர் என்றும், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு கலஃபூன் ஆகியோர் இவர் பலமானவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/159)


1 . இந்தக் கருத்தில் அபூராஃபிஉ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-929 , ஹாகிம்-1307 , 1340 , குப்ரா பைஹகீ-6655 ,

2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8077 .

3 . ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12076 .


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.