தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-8077

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஒரு இறந்த மனிதரைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை, பாவங்களை விட்டு அல்லாஹ் தூய்மைப்படுத்துகிறான்;

இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஸுன்துஸ் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8077)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَهْلِ بْنِ أَيُّوبَ الْأَهْوَازِيُّ، ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ الْحَذَّاءُ، ثنا سُلَيْمُ بْنُ أَخْضَرَ، ثنا سُعَيْرُ بْنُ الْخِمْسِ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ غَسَّلَ مَيِّتًا، فَسَتَرَهُ سَتَرَهُ اللهُ مِنَ الذُّنُوبِ، وَمَنْ كَفَّنَهُ كَسَاهُ اللهُ مِنَ السُّنْدُسِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8077.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7999.




إسناد ضعيف فيه أحمد بن سهل الأهوازي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-4024-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸஹ்ல்
    பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூ ஃகாலிப் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8077 , 8078 , அல்மதாலிபுல் ஆலியா-796 ,


  • அல்மதாலிபுல் ஆலியா-796.

المطالب العالية محققا (5/ 249):
‌‌5 – بَابُ غُسْلِ الْمَيِّتِ
796 – قَالَ أَبُو يَعْلَى: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، حَدَّثنا الْمُعْتَمِرُ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الشَّامِيِّ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ غَسَّلَ مَيِّتًا وَكَتَمَ عَلَيْهِ طَهَّرَهُ اللَّهُ تَعَالَى مِنْ ذُنُوبِهِ، فإِن كَفَّنَهُ كَسَاهُ اللَّهُ عز وجل من السندس

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபூஅப்துல்லாஹ் அஷ்ஷாமீ என்பவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்று மதாலிபுல் ஆலியா எனும் நூலின் ஹதீஸ்களுக்கு தரம் குறிப்பிட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர். இவரை ஜவாமிஉல் கலிமில் ராவீ-24730-அப்துல்லாஹ் பின் ஷவ்தப் என்று கூறப்பட்டுள்ளது.
  • இவர் ராவீ-44069-மர்ஸூக் அபூஅப்துல்லாஹ் அஷ்ஷாமீ அல்ஹிம்ஸீ என்பவர் ஆவார் என்ற தகவல் உள்ளது.
  • இவரைப் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் லைஸ பிஹீ பஃஸ் – இவரிடம் குறையில்லை என்று கூறியுள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பலமானவருக்கும் இப்படி கூறுவார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரை ஸதூக் எனும் தரத்திலும்,
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை சுமாரானவர் என்ற கருத்திலும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/48, தக்ரீபுத் தஹ்தீப்-1/930)

  • மேலும் இதில் வரும் ராவீ அபூ ஃகாலிப் பற்றி சிலர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் காரிஜிய்யாக்களின் ஹதீஸ்களை அறிவிப்பவர் என்றும், இவரின் ஹதீஸ்களை மற்ற பலமான அறிவிப்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தே ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/570)


இந்தக் கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.

பார்க்க: ஹாகிம்-1307 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.