அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினால் அதில் பின்வரும் துஆவை ஓதுவார்கள்.
அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வகாயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு
பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 1498)حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1487.
Ibn-Majah-Shamila-1498.
Ibn-Majah-Alamiah-1487.
Ibn-Majah-JawamiulKalim-1487.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36907-இப்னு இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர். முஹம்மது பின் இப்ராஹீமிடம் இந்த செய்தியை நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை.
- மேலும் இதில் வரும் ராவீ-18891-ஸுவைத் பின் ஸயீத் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
2 . முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ வழியாக வரும் செய்திகள்:
முஹம்மத் பின் இஸ்ஹாகின் அறிவிப்பு:
பார்க்க: இப்னு மாஜா-1498 , குப்ரா நஸாயீ-10853 , இலல்-தாரகுத்னீ-1794 , அத்துஆ-தப்ரானீ-1173 , குப்ரா பைஹகீ-6975 ,
- இலல்-தாரகுத்னீ-1794.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (9/ 321)
…فَرَوَاهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، وَإِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ. وَخَالَفَهُمْ إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، رَوَاهُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
- அத்துஆ-தப்ரானீ-1173.
الدعاء للطبراني (ص: 355)
1173 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِقَالٍ الْحَرَّانِيُّ، ثنا أَبُو جَعْفَرٍ النُّفَيْلِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تَفْتِنَّا بَعْدَهُ»
இஸ்மாயீல் பின் அய்யாஷின் அறிவிப்பு:
பார்க்க: அத்துஆ-தப்ரானீ-1172.
الدعاء للطبراني (ص: 355)
1172 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمُعَلَّى الدِّمَشْقِيُّ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، وَلَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تَفْتِنَّا بَعْدَهُ»
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (9/ 321)
…فَرَوَاهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، وَإِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ. وَخَالَفَهُمْ إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، رَوَاهُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அலீ பின் முஸ்ஹிர், முஹம்மத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸலமா, இப்ராஹீம் பின் ஸஃத் ஆகியோர் அறிவித்துள்ள, முஹம்மத் பின் இஸ்ஹாக் —> முஹம்மத் பின் இப்ராஹீம் —> அபூஸலமா (ரஹ்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடருக்கு இஸ்மாயீல் பின் அய்யாஷ் மாற்றமாக அறிவித்துள்ளார் என்பதாலும், முஹம்மத் பின் இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்ற காரணத்தாலும் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-3201 .
சமீப விமர்சனங்கள்