தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27186

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

27186. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது நபி (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூ ராஃபிஃ (ரலி)

أبو رافع

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அஸ்லம் அல்லது இப்ராஹீம்

புனைப்பெயர்: அபூராஃபிஃ

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, கூஃபா

பிறப்பு: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இவர் அல்-அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாக இருந்தார். அல்-அப்பாஸ் (ரலி) அவர்கள் இவரை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அல்-அப்பாஸ் (ரலி) இஸ்லாமைத் தழுவியபோது, நபி (ஸல்) அவர்கள் இவரை விடுதலை செய்தார்கள்.

இவர் உஹது மற்றும் அகழ்ப்போர் போன்ற போர்களில் கலந்துகொண்டார். மக்கா, மதீனா, கூஃபா ஆகிய இடங்களில் வசித்தார். ஹிஜ்ரி 40 இல் அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கூஃபாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அலீ பின் அபூதாலிப், இப்னு மஸ்ஊத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்ஃபள்ல் பின் அபூராஃபிஃ, அல்ஹஸன் பின் அபூராஃபிஃ, ராஃபிஃ பின் அபூராஃபிஃ, உபைதுல்லாஹ் பின் அபூராஃபிஃ, அல்முகீரா பின் அபூராஃபிஃ, அலீ பின் அல்ஹுஸைன் பின் அலீ, கைஸான் அபூஸயீத் அல்முக்பரீ, ஸுலைமான் பின் யஸார், அதா பின் யஸார், அபூ ஃகதாஃபான், அம்ர் பின் அஷ்ஷரீத், ஷரஹ்பீல் பின் ஸஅத்

வேறு பெயர்கள்: அஸ்லம், இப்ராஹீம்


ஆதாரம்: muslimscholars.info (479) · Should verify


حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27186.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26551.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆஸிம் பின் உபைதுல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1514 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.