அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். (மாறாக) அதில் (உபரியான) தொழுகைகளை தொழுதுக் கொள்ளுங்கள்.
யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி எழுதப்படும்.
யாரேனும் இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுத்தாலும், அல்லது (அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின்) அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாத்தாலும் போராளியின் கூலியில் எதுவும் குறையாமல் அவருக்கும் அவரின் கூலி போன்று எழுதப்படும்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 17044)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا صَلُّوا فِيهَا»
«وَمَنْ فَطَّرَ صَائِمًا، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ الصَّائِمِ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ»
«وَمَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ الْغَازِي فِي أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الْغَازِي شَيْءٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17044.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16711,16712
,16713.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉ பின் அபூ ரபாஹ் அவர்கள் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . முதல் பகுதி பார்க்க: அஹ்மத்-17030 .
2 . இரண்டாம் பகுதி பார்க்க: திர்மிதீ-807 .
1 . இந்த செய்தியின் முதல் பகுதி வேறு சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.
பார்க்க: புகாரி-432 .
2 . இந்த செய்தியின் மூன்றாவது பகுதி வேறு சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.
பார்க்க: புகாரி-2843 .
சமீப விமர்சனங்கள்