ஒரு பெண் அபூஹுரைரா (ரலி) அவர்களை நோன்புத் துறக்க அழைத்திருக்க, அவர்களும் அங்கு சென்று நோன்பு திறந்தார்.
பின்பு நோன்பாளி, ஒரு வீட்டாரிடம் நோன்பு துறந்தால் அவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றே அந்த வீட்டாருக்கும் கூலி கிடைக்கும் என்ற செய்தியை உனக்கு அறிவிக்கிறேன் என்று (அந்த பெண்ணிடம்) கூறினார்கள்.
அதற்கு அந்த பெண், நீங்கள் என் வீட்டில் நோன்பு துறக்கும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருந்தேன் என்று கூறினார். நான் நோன்பு துறக்கும் வீட்டாருக்கும் எனக்கு கிடைக்கும் கூலி போன்றது கிடைக்க விரும்புகிறேன் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் அபூ கஸீர் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-7908: 7908)
عَنْ عُمَرَ بْنِ رَاشِدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
دَعَتْهُ امْرَأَةٌ لِيُفْطِرَ عِنْدَهَا فَفَعَلَ، وَقَالَ: «إِنِّي أُخْبِرُكِ أَنَّهُ لَيْسَ مِنْ رَجُلٍ يُفْطِرُ عِنْدَ أَهْلِ بَيْتٍ إِلَّا كَانَ لَهُمْ مِثْلُ أَجْرِهِ»، فَقَالَتْ: وَدِدْتُ أَنَّكَ تَتَحَيَّنُ، أَوْ نَحْوَ ذَلِكَ لِتُفْطِرَ عِنْدِي قَالَ: «إِنِّي أُرِيدُ أَنْ أَجْعَلَهُ لِأَهْلِ بَيْتِي»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7908.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7696.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் அபூ கஸீர் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
قال أبو حاتم : ولم يدرك أحدا من الصحابة إلا أنسا رآه رؤية
تهذيب التهذيب: (4 / 383)
மேலும் பார்க்க : திர்மிதீ-807 .
சமீப விமர்சனங்கள்