தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-7908

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

7908. ஒரு பெண் அபூஹுரைரா (ரலி) அவர்களை நோன்புத் துறக்க அழைத்திருக்க, அவர்களும் அங்கு சென்று நோன்பு திறந்தார்.

பின்பு நோன்பாளி, ஒரு வீட்டாரிடம் நோன்பு துறந்தால் அவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றே அந்த வீட்டாருக்கும் கூலி கிடைக்கும் என்ற செய்தியை உனக்கு அறிவிக்கிறேன் என்று (அந்த பெண்ணிடம்)  கூறினார்கள்.

அதற்கு அந்த பெண், நீங்கள் என் வீட்டில் நோன்பு துறக்கும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருந்தேன் என்று கூறினார். நான் நோன்பு துறக்கும் வீட்டாருக்கும் எனக்கு கிடைக்கும் கூலி போன்றது கிடைக்க விரும்புகிறேன் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

 

யஹ்யா பின் அபூ கஸீர் (ரஹ்)

யஹ்யா பின் அபூகஸீர்-அத்தாயீ (ரஹ்) – Yahya bin Abi Kathir

இறப்பு: ஹிஜ்ரி 132 அல்லது அதற்கு முன், அல்யமாமா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா பின் ஸாலிஹ் பின் அல்முதவக்கில்

தந்தை பெயர்: அபூ கஸீர்

வம்சம்: அத்தாயீ

புனைப்பெயர்: அபூ நஸ்ர்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா, அல்யமாமா

இறப்பு: ஹிஜ்ரி 132 அல்லது அதற்கு முன், அல்யமாமா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஹ்யா பின் அபூகஸீர் ரஹ் அவர்கள் அபூ நஸ்ர் என்ற குன்யாவுடன் அறியப்பட்டவர். இவர் தாயீ கோத்திரத்தின் மவ்லா ஆவார். இவர் மிகப் பலமானவர்.

இவர் பஸராவைச் சேர்ந்தவர், பின்னர் அல்யமாமாவில் வசித்தார். ஹிஜ்ரி 132 அல்லது அதற்கு முன் அல்யமாமாவில் மரணமடைந்தார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர்.

இமாம் அய்யூப் அஸ்ஸக்தியானீ ரஹ் அவர்கள், 'யஹ்யா பின் அபூகஸீர் போன்றவர் பூமியில் எவரும் இல்லை' என்று கூறியுள்ளார்கள். இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்கள், 'இவர் ஸுஹ்ரீ மற்றும் யஹ்யா பின் ஸயீத் ஆகியோருடன் நம்பகத்தன்மையில் ஒப்பிடப்படுபவர்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ்களை அறிவிக்கும்போது தத்லீஸ் (மூலத்தை மறைத்து அறிவித்தல்) செய்பவர் என்றும் அறியப்பட்டவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், ஹிலால் பின் அபூமைமூனா, முஹம்மத் பின் இப்ராஹீம் பின் அல்ஹாரிஸ், யஃலா பின் ஹகீம் அஸ்ஸகஃபீ, முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸஃத், முஹம்மத் பின் அம்ர் பின் ஸவ்பான், அபூ குலாபா, அப்துல்லாஹ் பின் ஸைத் அல்ஜர்மீ, அல்மந்தர் பின் மாலிக் பின் கதாஅ, ஸைத் பின் ஸலாம், ளம்ளம் பின் ஜவ்ஷன்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபூகஸீர், அய்யூப் அஸ்ஸக்தியானீ, யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, அல்ஹுஸைன் பின் தக்வான் அல்முஅல்லம், மஃமர் பின் ராஷித், ஹிஷாம் பின் ஹஸ்ஸான் அல்அஸ்தீ, ஹிஷாம் பின் அபூஅப்துல்லாஹ் அத்தஸ்தவாயீ, ஹம்மாம் பின் யஹ்யா பின் தீனார், அய்யூப் பின் அன்நஜ்ஜார் பின் ஸியாத், அபான் பின் யஸீத் அல்அத்தார், ஹர்ப் பின் ஷத்தாத் அல்யஷ்கரீ

வேறு பெயர்கள்: இப்னு அபூகஸீர்


ஆதாரம்: muslimscholars.info (11449) · Should verify


عَنْ عُمَرَ بْنِ رَاشِدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

دَعَتْهُ امْرَأَةٌ لِيُفْطِرَ عِنْدَهَا فَفَعَلَ، وَقَالَ: «إِنِّي أُخْبِرُكِ أَنَّهُ لَيْسَ مِنْ رَجُلٍ يُفْطِرُ عِنْدَ أَهْلِ بَيْتٍ إِلَّا كَانَ لَهُمْ مِثْلُ أَجْرِهِ»، فَقَالَتْ: وَدِدْتُ أَنَّكَ تَتَحَيَّنُ، أَوْ نَحْوَ ذَلِكَ لِتُفْطِرَ عِنْدِي قَالَ: «إِنِّي أُرِيدُ أَنْ أَجْعَلَهُ لِأَهْلِ بَيْتِي»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7908.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7696.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் அபூ கஸீர் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

قال أبو حاتم : ولم يدرك أحدا من الصحابة إلا أنسا رآه رؤية
تهذيب التهذيب: (4 / 383)

மேலும் பார்க்க : திர்மிதீ-807 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.