தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-8134

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)

(பைஹகீ-குப்ரா: 8134)

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا مُسَدَّدٌ، ثنا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ،

أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: ” اللهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-8134.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-7515.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) நபித்தோழர் அல்ல. நபித்தோழர்களை அடுத்து வந்த தாபிஈ அல்லது  தாபியீன்களை அடுத்து வந்தவர் ஆவார். எனவே இது முர்ஸலான , அல்லது முன்கதிஃயான செய்தி என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-2358 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.