தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2358

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)

(அபூதாவூத்: 2358)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ، أَنَّهُ بَلَغَهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2358.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2014.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) நபித்தோழர் அல்ல. நபித்தோழர்களை அடுத்து வந்த தாபிஈ அல்லது  தாபியீன்களை அடுத்து வந்தவர் ஆவார். எனவே இது முர்ஸலான , அல்லது முன்கதிஃயான செய்தி என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-2358 , குப்ரா பைஹகீ-8134 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9744 ,

3 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-7549 , அல்முஃஜமுஸ் ஸகீர்-912 ,

4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-12720 , தாரகுத்னீ-2280 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2357 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.