நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்! அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(almujam-assaghir-912: 912)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ شَبِيبٍ الْعَسَّالُ الْأَصْبَهَانِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، حَدَّثَنَا دَاوُدُ الزِّبْرِقَانُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «بِسْمِ اللَّهِ اللَّهُمَّ , لَكَ صُمْتُ , وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»
لَمْ يَرْوِهِ عَنْ شُعْبَةَ إِلَّا دَاوُدُ بْنُ الزِّبْرِقَانِ تَفَرَّدَ بِهِ إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو , وَلَا كَتَبْنَاهُ إِلَّا عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ
Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-912.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-913.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி தாவூத் பின் ஸிப்ரிக்கான் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/563, தக்ரீபுத் தஹ்தீப்-1/305)
- மேலும் ராவி இஸ்மாயீல் பின் அம்ர் பலவீனமானவர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/162)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-2358 .
சமீப விமர்சனங்கள்