தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-9503

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

9503. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் (பிறை தெரியாத) சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.

அறிவிப்பவர்: (ரஹ்)

 

ஸிமாக் (ரஹ்)

سماك بن حرب

இறப்பு: ஹி-123.


இயற்பெயர்: ஸிமாக்

தந்தை பெயர்: ஹர்ப்

ஊர் பெயர்: கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி-123.

கால கட்டம்: 4.


ஸிமாக் பின் ஹர்ப் அவர்களைப் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், சிலர் இவர் இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்றும், வயதானக் காலத்தில் ஹதீஸ் அறிவிக்கும் போது மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதை, இடையில் கூறுவதை அப்படியே கூறுவார் என்றும், சிலர் இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்றும் கூறியுள்ளனர்.

1 . ஸிமாக் பின் ஹர்ப் பலமானவர் என்று கூறியுள்ளார்.

2 . இவர் இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவரை விட பரவாயில்லை.

3 . மற்றவர்கள் நபியின் சொல்லாக அறிவிக்காத சில செய்திகளை இவர் (இக்ரிமா ---> இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக) நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

4 . ஷுஅபா அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறினார். காரணம் இக்ரிமா கூறியதாக தஃப்ஸீர்-குர்ஆன் விளக்கவுரையை அறிவிப்பார். அதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா கேட்டாரா? என்று நான் கேட்டால் ஆம் என்று கூறியிருப்பார். (அதாவது தல்கீனை-சொல்லிக் கொடுப்பதை அப்படியே ஏற்பவராக இருந்தார்). எனவே தான் ஷுஅபா அவர்கள் தஃப்ஸீர் செய்திகளை அறிவிக்கும்போது இக்ரிமா வரை மட்டுமே அறிவிப்பாளரைக் கூறுவார் என்று இப்னு மயீன் கூறியுள்ளார்.

இப்னு அபூஹாதிம், தனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம் இவரைப் பற்றி கேட்கும்போது இவர், ஸதூக்-நம்பகமானவர் என்றும், ஸிகத்-பலமானவர் என்றும் கூறினார். அஹ்மத் இமாம் அவர்கள் இவரை அப்துல்மலிக் பின் உமைர் என்பவரை விட பரவாயில்லை என்று கூறியுள்ளாரே! என்று இப்னு அபூஹாதிம் கேட்கும்போது ஆம், அஹ்மத் இமாமின் கருத்து சரியானதே என்று கூறினார்.

இப்னு அதீ அவர்கள், இவர் கூஃபாவைச் சேர்ந்த மூத்த தாபிஈன்களில் ஒருவர். இவரின் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை. இவர் ஸதூக்-நம்பகமானவர்; சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

1 . ஷுஅபா அவர்கள் குறை கூறினார் என்று அஃப்பான் கூறியதாக உகைலீ அறிவித்துள்ளார். (என்ன வார்த்தையில் குறை கூறினார் என்று தான் மனனமிடவில்லை என்பதை அஃப்பான் அவர்களே குறிப்பிட்டுள்ளார்).

2 . ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக இப்னுல் முபாரக் அவர்களும், சில செய்திகளில் பலவீனமானவர் என்று கூறியதாக இஜ்லீ அவர்களும் கூறியுள்ளனர்.

3 . இப்னுல் முபாரக் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக ஸகரிய்யா பின் அதீ கூறியுள்ளார்.

4 . இப்னு கிராஷ் அவர்கள் இவரின் செய்தியில் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.

(இந்த விமர்சனங்கள் இவரின் சில செய்திகள் விசயத்தில் தான் சரியானதாகும்)

1 . இவர் பலமானவர்; இவரின் நினைவாற்றல் கெட்டுவிட்டது என்று தஹபீ இமாம் கூறியுள்ளார். இவரின் நினைவாற்றல் கெட்டுவிட்டது என்று கூறியதற்கு காரணம் இவர் இறுதிகாலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று கூறியவரின் கருத்தை ஏற்றதால் தான் இவ்வாறு தஹபீ கூறியுள்ளார்.

நான், ஸிமாக் பின் ஹர்பிடம் சென்றபோது அவர் நின்றவராக சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். எனவே வயதான காரணத்தால் அவரின் அறிவு கெட்டுவிட்டது (மூளைக் குழம்பிவிட்டார்) என்று நான் அவரிடம் எதையும் கேட்காமல் திரும்பிச் சென்று விட்டேன்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-2/233)

2 . மூளைக் குழம்பிவிட்டார் என்பதற்கு நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்ததை காரணமாக கூறியிருப்பது சரியானதல்ல என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

3 . ஹதீஸை அறிவிக்கும் போது மற்றவர்கள் (மாணவர்கள்) சொல்லிக் கொடுப்பதை அப்படியே கூறுபவர் என்ற விமர்சனம் அனைத்து செய்திகள் விசயத்திலும் அல்ல. இவர், இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் விசயத்தில் தான் ஆரம்பத்தில் அப்படி ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் இவர் சில செய்திகளை இக்ரிமா கூறியதாக மனனமிட்டுருப்பார்; சில செய்திகளை இக்ரிமா ---> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மனனமிட்டிருப்பார். இதை அவர் அறிவிக்கும்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது ஷுஅபா, இப்னு மயீன் ஆகியோரின் விமர்சனத்திலிருந்து நமக்கு தெரிகிறது என்று ஸாலிஹ் ரிஃபாயீ என்ற அறிஞர் கூறியுள்ளார்.

இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகளை இவரிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்ற ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ போன்றோர் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்று யஃகூப் பின் ஷைபா அவர்கள் கூறியுள்ளார்.

4 . அஹ்மத் இமாம், இவரின் செய்திகள் குளறுபடியானவை என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-791)

(இந்த விமர்சனத்தை ஷுஅபா அவர்களின் கூற்றிலிருந்தே அஹ்மத் இமாம் எடுத்துள்ளார் என்பதால் இது சில செய்திகள் விசயத்தில் தான் சரியானதாகும்)

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/279, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/541, தஹ்தீபுல் கமால்-12/115, அல்இக்மால்-6/109, தஹ்தீபுத் தஹ்தீப்-2/114, தக்ரீபுத் தஹ்தீப்-1/415, அல்கவாகிபுன் நய்யிராத்-1/237, அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-791)


1 . ஸிமாக் அவர்கள், இக்ரிமா ---> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தனித்து அறிவிக்கும் செய்திகள்.

இவைகள் பெரும்பாலும் முன்கராக-மறுக்கப்பட வேண்டிய செய்திகளாக இருக்கும். இவை பலவீனமானவை.

2 . ஸிமாகிடமிருந்து ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ, அபுல்அஹ்வஸ் ஆகியோர் ஸிமாக் ---> இக்ரிமா ---> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகள்.

இதில் வரும் செய்திகளை ஆய்வு செய்யவேண்டும். ஆய்வில் சிலவை சரியாகவும் இருக்கலாம். சிலவை பலவீனமாகவும் இருக்கலாம்.

3 . ஸிமாக் அவர்கள், இக்ரிமாவிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாத நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் செய்திகள்.

இதில் வரும் செய்திகள் பெரும்பாலும் சரியானவை. இவைகளை தாரகுத்னீ, பைஹகீ போன்ற பலர் சரியானது என்று கூறியுள்ளனர்.

இந்தத் தகவலை அப்துல்அஸீஸ் தரீஃபீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: ஷரஹ் புலூஃகுல் மராம்-50)


1 . ஸிமாக் அவர்கள் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்று இப்னுல் மதீனீ அவர்கள் கூறியதற்கு காரணம் உள்ளது. இவரிடமிருந்து ஷுஅபா, ஸுஃப்யான் ஆகியோர் சில செய்திகளை இக்ரிமாவுடன் நிறுத்தியுள்ளார்கள். அதாவது நபித்தோழரைக் குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார்கள். அபுல்அஹ்வஸ், இஸ்ராயீல் ஆகியோர் ஸிமாக் ---> இக்ரிமா ---> இப்னு அப்பாஸ் (ரலி) என்று அறிவித்துள்ளார்கள். எனவே சிலர் முர்ஸலாகவும் சிலர் முத்தஸிலாகவும் அறிவிப்பதால் தான் இப்னுல் மதீனீ அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலை இல்லாத செய்திகள் சரியானவையாகும்.

2 . இந்த தகவலைப் போன்றே மற்றொரு தகவலை இஜ்லீ இமாம் கூறியுள்ளதை அவர் மகன் வழியாக கதீப் பஃக்தாதீ பதிவு செய்துள்ளார்.

تاريخ مدينة السلام للخطيب البغدادي (10/ 298)

أخبرنا حمزة بن محمد بن طاهر، قال: حَدثنا الوليد بن بكر، قال: حَدثنا عَليّ بن أَحمد بن زكريا الهاشمي، قال: حَدثنا أَبو مسلم صالح بن أَحمد بن عَبد الله العجلي، قال: حَدثني أبي قال: وسماك بن حرب بكري جائز الحديث إلا أنه كان في حديث عكرمة ربما وصل الشيء، عن ابن عباس وربما، قال: قال رسولُ الله صَلى الله عَليهِ وسلمَ وإنما كان عكرمة يحدث، عن ابن عباس، وَكان سفيان الثوري يضعفه بعض الضعف، وَكان جائز الحديث لم يترك حديثه أحد، وَكان عالما بالشعر وأيام الناس، وَكان فصيحا.

ஸிமாக் பின் ஹர்ப் சுமாரானவர். என்றாலும் இவர், இக்ரிமா அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவித்த சில செய்திகளை இக்ரிமா ---> இப்னு அப்பாஸ் (ரலி) ---> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். எனவே தான் சில செய்திகளில் இவரை ஸுஃப்யான் ஸவ்ரீ பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

இவர் ஹதீஸ்களை அறிவிக்கத் தகுதியானவராகவே இருந்தார்; இவரது ஹதீஸ்களை எவரும் கைவிடவில்லை. மேலும், இவர் கவிதைகளையும், அரபு மக்களின் வரலாற்று நிகழ்வுகளையும் (அய்யாமுல் அரப்) நன்கு அறிந்தவராகவும், சரளமாகப் பேசும் ஆற்றல் (பஸாஹத்) மிக்கவராகவும் திகழ்ந்தார்.

(நூல்: தாரீகு மதீனதுஸ் ஸலாம்-10/298)


1 . ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ போன்றவர்கள் ஸிமாக் மூளை குழம்புவதற்கு முன்னர் அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் ஆவர். மூளை குழம்பிய பின்னர் அவரிடம் இவர்கள் எதையும் கேட்டதில்லை. எனவே இவர்கள் ஸிமாக் வழியாக அறிவித்தால் அவை ஆதாரப்பூர்வமானது.

2 . இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகளை குளறுபடியாக அறிவித்துள்ளார் என்ற இப்னுல் மதீனீ அவர்களின் விமர்சனத்தின்படி அவை ஆய்வுக்குரியவை.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-2579 (12/115), தக்ரீபுத் தஹ்தீப்-1/415)


[تقريب تقريب التهذيب 1/ 631:]

* [2624] سماك بكسر أوله وتخفيف الميم بن حرب بن أوس بن خالد الذهلي البكري الكوفي أبو المغيرة صدوق وروايته عن عكرمة خاصة مضطربة وقد تغير بأخرة فكان ربما تلقن من الرابعة مات سنة ثلاث وعشرين خت م 4

قلت: قال الحاكم في المستدرك (1/ 262 رقم 565) "احتج مسلم بأحاديث سماك بن حرب".


حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ:

«مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَدْ عَصَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-9503.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-9294.



3 . இந்தக் கருத்தில் இக்ரிமா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 9503 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-686 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.