தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-686

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு வைப்பது வெறுப்பிற்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டு இறைச்சி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள், ‘உண்ணுங்கள்’ என்று கூறினார்கள். (அங்கிருந்த) மக்களில் சிலர் சாப்பிடாமல் ஒதுங்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘நான் நோன்பு வைத்துள்ளேன்’ என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், (இது ரமளான் மாதத்தின் முதல் நாளா? அல்லது ஷஅபான் மாதத்தின் இறுதி நாளா? எனச்) சந்தேகத்திற்குரிய நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர், அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்’ என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான ஹதீஸ் அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது. மேற்கண்ட அம்மார் வழியாக வந்துள்ள ஹதீஸ் ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டுமென நபித்தோழர்கள், அவர்களுக்கு அடுத்துவந்த தாபிஈன் அறிஞர்களில் பெரும்பாலோர் கருதுகின்றனர்.

ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர். மேலும் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு வைப்பது வெறுக்கத்தக்கதாகும் என்று அவர்கள் கூறுகின்றனர். அந்த நாளில் ஒருவர் நோன்பு வைத்து அது ரமளான் மாதமாகவே இருந்தாலும் (அந்த நோன்பு செல்லாது). அதற்கு பகரமாக மற்றொரு நாளில் நோன்பு நோற்கவேண்டுமென அவர்களில் பெரும்பாலோர் கருதுகின்றனர்.

(திர்மிதி: 686)

بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ صَوْمِ يَوْمِ الشَّكِّ

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ:

كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ.: «حَدِيثُ عَمَّارٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ، وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، كَرِهُوا أَنْ يَصُومَ الرَّجُلُ اليَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، وَرَأَى أَكْثَرُهُمْ إِنْ صَامَهُ فَكَانَ مِنْ شَهْرِ رَمَضَانَ أَنْ يَقْضِيَ يَوْمًا مَكَانَهُ


Tirmidhi-Tamil-622.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-686.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-621.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார்.
  • இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
  • மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 121/130
    அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
    இறப்பு ஹிஜ்ரி 310
    வயது: 86
    அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 338
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)

அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்கள், அதிகமான ஹதீஸ்களை மனனமிட்டவர்-ஹாஃபிள் ஆவார். இவரைப் பற்றி அதிகமான அறிஞர்கள் பாரட்டியுள்ளனர்.

என்றாலும் இவரைப் பற்றி சில விமர்சனங்கள் உள்ளன.

1 . இவர் சில நபித்தோழர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் முர்ஸல் (முன்கதிஃ) ஆகும்.

2 . இவர் தத்லீஸ் செய்பவர். (சிலர் இவரின் தத்லீஸ் குறைவானதே என்றும் கூறியுள்ளனர்).

3 . இவர் இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார். (தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்றவர்கள் வயதான காரணத்தால் தான் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்).

4 . அறியப்படாதவர்களிடமிருந்து சில செய்திகளை அறிவித்துள்ளார்.

5 . சில செய்திகளை மற்றவர்கள் அறிவிக்காத பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் அறிவித்துள்ளார். (என்றாலும் இவரின் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிகமானவர்கள் என்பதால் இது விமர்சனம் ஆகாது)

(விரிவான தகவல்: அஹாதீஸு அபீஇஸ்ஹாக், பக்கம்: 74-85)

  • இந்தச் செய்தியை திர்மிதீ இமாம் ‘ஹஸன் ஸஹீஹ்’ என்று கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்கள்; இது ‘ஹஸன் ஸஹீஹ்’ என்று கூறியுள்ளார்.
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள், இது புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகியோரின் நிபந்தனைப்படி உள்ள செய்தி என்று கூறியுள்ளார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    நூலை ஆய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் ஹாகிமின் கருத்தை சரியானது என்று கூறியுள்ளார்.
  • இந்தத் தகவலை குறிப்பிட்ட அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இது புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    நிபந்தனைப்படி உள்ள செய்தி அல்ல; காரணம் இதில் இடம்பெறும் அம்ர் பின் கைஸ் என்பவரை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் ஆதாரமாக கொள்ளவில்லை; மேலும் இதில் இடம்பெறும் அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்று பலர் கூறியுள்ளனர்; இந்தச் செய்தியை அவர் ஸிலது பின் ஸுஃபர் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தாரகுத்னீ-2150 , ஹாகிம்-1542 , இர்வாஉல் ஃகலீல்-961)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் இந்தச் செய்தியை சரியானது என்று கூறியுள்ளார். ஆனால் இதில் உள்ள குறைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஃக்லீகுத் தஃலீக் 3/142)

  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள் இந்த ஹதீஸை பாடத்தலைப்பாக அமைத்துள்ளார். (தனி ஹதீஸாக பதிவு செய்யவில்லை)

(பார்க்க: புகாரி-1906)

1 . இந்த செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் அபூஇஸ்ஹாக் அவர்கள், ஸிலது பின் ஸுஃபர் அவர்களிடமிருந்து எனக்கு அறிவிக்கப்பட்டது என்று கூறியதாக அறிவித்துள்ளனர் என்பதால் இதில் இல்லத்-நுணுக்கமான குறை உள்ளது என்று திர்மிதீ இமாம் தனது இலலில் கூறியுள்ளதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (என்றாலும் இலலுத் திர்மிதியில் இந்த வாசகம் விடுபட்டுள்ளது. இது அச்சில் ஏற்பட்ட தவறாக இருக்கலாம்)

2 . முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7318 இல் வரும் செய்தியில் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மனிதரை ஸிலது பின் ஸுஃபர் என்று முடிவு செய்தால் அந்த செய்தி இந்த செய்தியை பலப்படுத்தும் என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறியுள்ளார்.

3 . முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9502 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7318 ஆகிய இரண்டு செய்திகளை குறிப்பிட்டு விட்டு, (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7318) இல் இடம்பெறும் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் அறிவிப்பு, ரிப்இய்யு பின் ஹிராஷ் அவர்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக இந்த செய்தியை கேட்கவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தஃக்லீகுத் தஃலீக் 3/142)

அபூஇஸ்ஹாக் அவர்களின் அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்த அஹ்மத்-பின்-ஸஃத் என்பவர் இந்த செய்தியை ஸஹீஹுன் லிகைரிஹீ என்று கூறியுள்ளார்.

(நூல்: அஹாதீஸு அபீஇஸ்ஹாக், பக்கம்: 1046-1049)

மேற்கண்ட தகவல்களிலிருந்து இந்தச் செய்தியில் இரண்டு விமர்சனம் உள்ளது என்று தெரிகிறது.

1 . அபூஇஸ்ஹாக் அவர்கள், ஸிலது பின் ஸுஃபர் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை.

2 . (ஆரம்ப கால நூலான) ஹதீஸு அபீஸயீத் அல்அஷஜ் என்ற நூலின் பக்கம் 142 ல், அபூஇஸ்ஹாக் அவர்கள், ஹுத்திஸ்து அன் ஸிலத் (ஸிலது பின் ஸுஃபர் அவர்களிடமிருந்து எனக்கு அறிவிக்கப்பட்டது) என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

«حديث أبي سعيد الأشج» (ص142):

«65 – ثنا أبو خالد الأحمر عن عمرو بن قيس عن أبي إسحاق قال ‌حدثت ‌عن ‌صلة ‌بن ‌زفر ‌العبسي قال كنا عند عمار فأتي بشاة مصلية فقال كلوا فتنحى بعض القوم فقال إني صائم فقال عمار من صام اليوم الذي يشك فيه فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم»

எனவே அபூஇஸ்ஹாக் அவர்களுக்கும், ஸிலது பின் ஸுஃபர் அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்று தெரிகிறது. அவரைப் பற்றிய விவரம் இல்லை என்பதால் இந்த செய்தி பலவீனமாகிறது.

என்றாலும் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு வைக்கக் கூடாது என்றக் கருத்தில் வேறு சில சரியான ஹதீஸ்கள் உள்ளன.

(பார்க்க: இப்னு ஹிப்பான்-2400 , புகாரி-1914 …)

1 . இந்தக் கருத்தில் அம்மார் பின் யாஸிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூகாலித் —> அம்ர் பின் கைஸ் —> அபூஇஸ்ஹாக் —>  ஸிலது பின் ஸுஃபர் —> அம்மார் பின் யாஸிர் (ரலி)

பார்க்க: தாரிமீ-1724 , இப்னு மாஜா-1645 , அபூதாவூத்-2334திர்மிதீ-686 , முஸ்னத் பஸ்ஸார்-1394 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-2188 , முஸ்னத் அபீ யஃலா-1644 , இப்னு குஸைமா-1914 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-3585 , 3595 , 3596 , தாரகுத்னீ-2150 , ஹாகிம்-1542 , குப்ரா பைஹகீ-7952 ,

  • ரிப்இய்யு பின் ஹிராஷ் —> ஒரு மனிதர் —> அம்மார் பின் யாஸிர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7318 ,

  • ரிப்இய்யு பின் ஹிராஷ் —> அம்மார் பின் யாஸிர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9502 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-2400 .

3 . இக்ரிமா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 9503 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1909 ,

2 comments on Tirmidhi-686

    1. இந்தச் செய்தியை சிலர் சரியானது என்று கூறியிருந்தாலும் இதில் விமர்சனம் உள்ளது. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.