பாடம்:
ஷஅபான் மாதத்தின் (இரண்டாவது) இறுதிப் பகுதியில் நோன்பு வைப்பது கண்டனத்திற்குரிய செயல் என்பதற்கான காரணம்.
ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒருநாள்) அது ரமளானின் முதல் நாளாக இருக்குமோ? என சந்தேகத்திற்குரிய நாளில் இக்ரிமா (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (என்னைப் பார்த்ததும்) ‘அருகில் வாருங்கள்’ என்று (சாப்பிட) அழைத்தார்கள். அதற்கு, நான் நோன்பு வைத்துள்ளேன் என்று சொன்னேன். அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அருகில் வந்து சாப்பிட வேண்டும்’ என்று கூறினார்கள்.
(அவர்கள் இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் நாடினால்) என்று கூறாமல் சத்தியம் செய்வதை நான் கண்டதால் நீங்கள் கூறும் கூற்றிற்கு ஆதாரமாக உள்ள) ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்’ என்று கேட்டேன்.
அதற்கவர்கள், “ரமளான் மாதத்திற்கு (ஓரிரு நாள்களுக்கு) முன்பாக நோன்பு வைத்து வரவேற்காதீர்கள். (ரமளான் முதல்) பிறையைக் கண்டு நோன்பு வையுங்கள். (அடுத்த மாதம் ஷவ்வால்) பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கும், பிறை காண்பதற்குமிடையே மேகமூட்டமோ, இருளோ குறுக்கிடுமானால் ஷஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாள்களாக நிறைவு செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் என்று கூறினார்கள்.
(இப்னு ஹிப்பான்: 2400)ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجَلِهَا زُجِرَ عَنِ الصَّوْمِ فِي النِّصْفِ الأَخِيرِ مِنْ شَعْبَانَ.
أَخبَرنا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدثنا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، قَالَ: حَدثنا يَحْيَى بْنُ كَثِيرٍ، قَالَ: حَدثنا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ:
دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ وَهُوَ يَأْكُلُ، فَقَالَ: ادْنُ فَكُلْ، قُلْتُ: إِنِّي صَائِمٌ، فَقَالَ: وَاللهِ لَتَدْنُوَنَّ، قُلْتُ: فَحَدِّثْنِي، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيه وسَلم، قَالَ: لاَ تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالاً، صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ غَبَرَةُ سَحَابٍ، أَوْ قَتَرَةٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ.
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2400.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3672.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18560-ஸிமாக் பின் ஹர்ப் அவர்களைப் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், சிலர் இவர் இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்றும், வயதானக் காலத்தில் ஹதீஸ் அறிவிக்கும் போது மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதை, இடையில் கூறுவதை அப்படியே கூறுவார் என்றும், சிலர் இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்றும் கூறியுள்ளனர்.
1 . பலமானவர் என்று கூறியவர்கள்:
- இவரைப் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் கருத்துப் பற்றி அவரின் மாணவர்கள் பலவாறு அறிவித்துள்ளனர்:
1 . ஸிமாக் பின் ஹர்ப் பலமானவர் என்று கூறியுள்ளார்.
2 . இவர் இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவரை விட பரவாயில்லை.
3 . மற்றவர்கள் நபியின் சொல்லாக அறிவிக்காத சில செய்திகளை இவர் (இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக) நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
4 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறினார். காரணம் இக்ரிமா கூறியதாக தஃப்ஸீர்-குர்ஆன் விளக்கவுரையை அறிவிப்பார். அதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா கேட்டாரா? என்று நான் கேட்டால் ஆம் என்று கூறியிருப்பார். (அதாவது தல்கீனை-சொல்லிக் கொடுப்பதை அப்படியே ஏற்பவராக இருந்தார்). எனவே தான் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் தஃப்ஸீர் செய்திகளை அறிவிக்கும்போது இக்ரிமா வரை மட்டுமே அறிவிப்பாளரைக் கூறுவார் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறியுள்ளார்.
- இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
தனது தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களிடம் இவரைப் பற்றி கேட்கும்போது இவர், ஸதூக்-நம்பகமானவர் என்றும், ஸிகத்-பலமானவர் என்றும் கூறினார். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள் இவரை அப்துல்மலிக் பின் உமைர் என்பவரை விட பரவாயில்லை என்று கூறியுள்ளாரே! என்று இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
கேட்கும்போது ஆம், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமின் கருத்து சரியானதே என்று கூறினார். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் கூஃபாவைச் சேர்ந்த மூத்த தாபிஈன்களில் ஒருவர். இவரின் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை. இவர் ஸதூக்-நம்பகமானவர்; சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
2 . பலவீனமானவர் என்று கூறியவர்கள்:
1 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் குறை கூறினார் என்று அஃப்பான் கூறியதாக உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அறிவித்துள்ளார். (என்ன வார்த்தையில் குறை கூறினார் என்று தான் மனனமிடவில்லை என்பதை அஃப்பான் அவர்களே குறிப்பிட்டுள்ளார்).
2 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களும், சில செய்திகளில் பலவீனமானவர் என்று கூறியதாக இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்களும் கூறியுள்ளனர்.
3 . இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
இவரை பலவீனமானவர் என்று கூறியதாக ஸகரிய்யா பின் அதீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 211
கூறியுள்ளார்.
4 . இப்னு கிராஷ் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 283
அவர்கள் இவரின் செய்தியில் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.
(இந்த விமர்சனங்கள் இவரின் சில செய்திகள் விசயத்தில் தான் சரியானதாகும்)
3 . நினைவாற்றல் சரியில்லாதவர்; இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பியவர்; மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே கூறுபவர் என்ற விமர்சனம்:
1 . இவர் பலமானவர்; இவரின் நினைவாற்றல் கெட்டுவிட்டது என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் கூறியுள்ளார். இவரின் நினைவாற்றல் கெட்டுவிட்டது என்று கூறியதற்கு காரணம் இவர் இறுதிகாலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று கூறியவரின் கருத்தை ஏற்றதால் தான் இவ்வாறு தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
கூறியுள்ளார்.
அது என்னவெனில், ஜரீர் பின் அப்துல்ஹமீத் என்பவர் கூறுகிறார்:
நான், ஸிமாக் பின் ஹர்பிடம் சென்றபோது அவர் நின்றவராக சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். எனவே வயதான காரணத்தால் அவரின் அறிவு கெட்டுவிட்டது (மூளைக் குழம்பிவிட்டார்) என்று நான் அவரிடம் எதையும் கேட்காமல் திரும்பிச் சென்று விட்டேன்.
(நூல்: மீஸானுல் இஃதிதால்-2/233)
2 . மூளைக் குழம்பிவிட்டார் என்பதற்கு நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்ததை காரணமாக கூறியிருப்பது சரியானதல்ல என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
3 . ஹதீஸை அறிவிக்கும் போது மற்றவர்கள் (மாணவர்கள்) சொல்லிக் கொடுப்பதை அப்படியே கூறுபவர் என்ற விமர்சனம் அனைத்து செய்திகள் விசயத்திலும் அல்ல. இவர், இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் விசயத்தில் தான் ஆரம்பத்தில் அப்படி ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் இவர் சில செய்திகளை இக்ரிமா கூறியதாக மனனமிட்டுருப்பார்; சில செய்திகளை இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மனனமிட்டிருப்பார். இதை அவர் அறிவிக்கும்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.ஆகியோரின் விமர்சனத்திலிருந்து நமக்கு தெரிகிறது என்று ஸாலிஹ் ரிஃபாயீ என்ற அறிஞர் கூறியுள்ளார்.
இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகளை இவரிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்ற ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
போன்றோர் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்று யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள் கூறியுள்ளார்.
4 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், இவரின் செய்திகள் குளறுபடியானவை என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-791)
(இந்த விமர்சனத்தை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களின் கூற்றிலிருந்தே அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் எடுத்துள்ளார் என்பதால் இது சில செய்திகள் விசயத்தில் தான் சரியானதாகும்)
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/279, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/541, தஹ்தீபுல் கமால்-12/115, அல்இக்மால்-6/109, தஹ்தீபுத் தஹ்தீப்-2/114, தக்ரீபுத் தஹ்தீப்-1/415, அல்கவாகிபுன் நய்யிராத்-1/237, அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-791)
இந்தச் செய்தியை ஸிமாக் பின் ஹர்ப் அவர்களிடமிருந்து ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான செய்தியாகும்.
ஸிமாக் அவர்கள், இக்ரிமா (ரஹ்) வழியாக அறிவிக்கும் செய்திகள் பற்றிய விளக்கம்:
1 . ஸிமாக் அவர்கள், இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தனித்து அறிவிக்கும் செய்திகள்.
இவைகள் பெரும்பாலும் முன்கராக இருக்கும். இவை பலவீனமானவை.
2 . ஸிமாகிடமிருந்து ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ, அபுல்அஹ்வஸ் ஆகியோர் ஸிமாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகள்.
இதில் வரும் செய்திகளை ஆய்வு செய்யவேண்டும். ஆய்வில் சிலவை சரியாகவும் இருக்கலாம். சிலவை பலவீனமாகவும் இருக்கலாம்.
3 . ஸிமாக் அவர்கள், இக்ரிமாவிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாத நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் செய்திகள்.
இதில் வரும் செய்திகள் பெரும்பாலும் சரியானவை. இவைகளை தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற பலர் சரியானது என்று கூறியுள்ளனர்.
இந்தத் தகவலை அப்துல்அஸீஸ் தரீஃபீ அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: ஷரஹ் புலூஃகுல் மராம்-50)
ஸிமாக் அவர்கள் இக்ரிமா வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியதற்கு காரணம் உள்ளது. இவரிடமிருந்து ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஆகியோர் சில செய்திகளை இக்ரிமாவுடன் நிறுத்தியுள்ளார்கள். அதாவது நபித்தோழரைக் குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார்கள். அபுல்அஹ்வஸ், இஸ்ராயீல் ஆகியோர் ஸிமாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்று அறிவித்துள்ளார்கள். எனவே சிலர் முர்ஸலாகவும் சிலர் முத்தஸிலாகவும் அறிவிப்பதால் தான் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலை இல்லாத செய்திகள் சரியானவையாகும்.
இந்த தகவலைப் போன்றே மற்றொரு தகவலை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் கூறியுள்ளதை அவர் மகன் வழியாக கதீப் பஃக்தாதீ பதிவு செய்துள்ளார்.
تاريخ مدينة السلام للخطيب البغدادي (10/ 298)
أخبرنا حمزة بن محمد بن طاهر، قال: حَدثنا الوليد بن بكر، قال: حَدثنا عَليّ بن أَحمد بن زكريا الهاشمي، قال: حَدثنا أَبو مسلم صالح بن أَحمد بن عَبد الله العجلي، قال: حَدثني أبي قال: وسماك بن حرب بكري جائز الحديث إلا أنه كان في حديث عكرمة ربما وصل الشيء، عن ابن عباس وربما، قال: قال رسولُ الله صَلى الله عَليهِ وسلمَ وإنما كان عكرمة يحدث، عن ابن عباس، وَكان سفيان الثوري يضعفه بعض الضعف، وَكان جائز الحديث لم يترك حديثه أحد، وَكان عالما بالشعر وأيام الناس، وَكان فصيحا.
ஸிமாக் பின் ஹர்ப் சுமாரானவர். என்றாலும் இவர், இக்ரிமா அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவித்த சில செய்திகளை இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். எனவே தான் சில செய்திகளில் இவரை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
பலவீனமானவர் என்று கூறியுள்ளார்…
(நூல்: தாரீகு மதீனதுஸ் ஸலாம்-10/298)
2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
சுருக்கமாக வரும் செய்திகள்:
- ஸிமாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, அபூதாவூத்-2327 , திர்மிதீ-688 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,
நிகழ்வுடன் வரும் செய்திகள்:
- ஸிமாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: தாரிமீ-1725 , குப்ரா நஸாயீ-2510 , நஸாயீ-2189 , இப்னு குஸைமா-1912 , இப்னு ஹிப்பான்-2400 , ஹாகிம்-1547 , குப்ரா பைஹகீ-7947 ,
- ஸவ்ர் பின் ஸைத் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: மாலிக்-783 ,
- அதாஉ பின் அபூரபாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,
அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> இப்னு அப்பாஸ் (ரலி)
அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> முஹம்மது பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> முஹம்மது பின் ஹுனைன் —> இப்னு அப்பாஸ் (ரலி)
முஹம்மது பின் அபூஹர்மலா —> குரைப் —> இப்னு அப்பாஸ் (ரலி)
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-686 .
நபிகளாரின் பொன்மொழிகள் இதயத்திற்கும் மன அமைதிக்கும் மனிதருக்கு எழுகின்ற பிரச்சனைகளை தீர்க்கப்படுவதற்கு முன்மாதிரி வாழ்ந்து காட்டியவர்