தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2177

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

அரஃபா முழுவதும் தங்குமிடமாகும். மினா முழுவதும் பலியிடும் இடமாகும். மக்காவின் பாதை முழுவதும் பலியிடும் இடமாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மது பின் முன்கதிர்

அறிவிப்பாளர் அய்யூபிடமிருந்து ஹம்மாத் பின் ஸைத் அறிவிக்கும் அறிவிப்பில் இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(daraqutni-2177: 2177)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ , ثنا الْحَسَنُ بْنُ عَرَفَةَ , ثنا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ , عَنْ أَيُّوبَ , عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , وَثنا أَبُو عُبَيْدٍ الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ , نا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ , نا عَبْدُ الْوَهَّابِ , نا أَيُّوبُ , عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ:

«إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ , فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَتِمُّوا الْعِدَّةَ ثَلَاثِينَ , فِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ وَأُضْحِيَتُكُمْ يَوْمَ تُضَحُّونَ وَكُلُّ عَرَفَةَ مَوْقِفٌ وَكُلُّ مِنًى مَنْحَرٌ وَكُلُّ فِجَاجِ مَكَّةَ مَنْحَرٌ»

رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ , عَنْ أَيُّوبَ وَرَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2177.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1915.




மேலும் பார்க்க: புகாரி-1909 .

2 comments on Daraqutni-2177

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    கீழ்காணும் ஹதீஸின் தரம் குறித்து தகவல் தேவை.

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    “நீங்கள் நோன்பை விடும் நாள்தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள். ‘அரஃபா’ பெருவெளி முழுவதும் தங்குமிடமாகும். மினா முழுவதும் கா பலியிடும் இடமாகும். மக்காவின் எல்லாப் பாதைகளும் பலியிடும் இடமாகும். முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடமாகும்.”

    இதை அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    அபுதாவுத் 1979.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.