அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் அலட்சியவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் பலமடங்கு நன்மைகள் செய்தவர்களில் சேர்க்கப்படுவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அபூஹாத்திம்-இப்னு ஹிப்பான் கூறுகிறார்:
(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்) அபூஸுவைத் என்ற புனைப்பெயர் கொண்டவரின் இயற்பெயர் மிஸ்ரை சேர்ந்த ஹுமைத் பின் ஸுவைத் என்பவராகும். சிலர் அபூஸவிய்யா என்று கூறுவது தவறாகும்.
(இப்னு ஹிப்பான்: 2572)أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا سُوَيْدٍ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ ابْنَ حُجَيْرَةَ يُخْبِرُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ، وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ الْمُقَنْطِرِينَ»
قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو سُوَيْدٍ اسْمُهُ حُمَيْدُ بْنُ سُوَيْدٍ مِنْ أَهْلِ مِصْرَ، وَقَدْ وَهِمَ مَنْ قَالَ: أَبُو سَوِيَّةَ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2572.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-2637.
- (இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்) அபூஸுவைத் என்பவர் உபைத் பின் ஸவிய்யா-அபூஸவிய்யா என்பதே சரியாகும் என இமாம் மிஸ்ஸீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் கூறியுள்ளனர். அபூஸவிய்யாவிற்கு அபூஸுவைத் என்ற புனைப்பெயரும் உள்ளது. எனவே இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்களின் கருத்து தவறாகும்.
(நூல் : தஹ்தீபுல் கமால் 19/213)
- (மிஸ்ரை சேர்ந்த ஹுமைத் பின் ஸுவைத் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்)
மேலும் பார்க்க : அபூதாவூத்-1398 .
சமீப விமர்சனங்கள்