அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து மக்காவிலிருந்து) வெளியேறிய செய்தி எங்களுக்கு எட்டியது. உடனே நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணம் புறப்பட்டோம். எங்கள் கப்பல் (திசைமாறி) எங்களை அபிசீனியாவில் மன்னர் நஜாஷீ அவர்களிடம் கொண்டு (போய் இறக்கிவிட்டுச்) சென்றுவிட்டது. நாங்கள் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களை(த் தற்செயலாக அங்கே) சந்தித்தோம். நாங்கள் அங்கிருந்து வரும் வரை ஜஅஃபர்(ரலி) அவர்களுடனேயே தங்கினோம். கைபரை நபி(ஸல்) அவர்கள் வெற்றிகொண்டிருந்த வேளையில் சென்று அவர்களை அடைந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், (எங்களை நோக்கி), ‘கப்பல்காரர்களே! உங்களுக்குத் தான் இரண்டு ஹிஜ்ரத்துகள்’ என்று கூறினார்கள்.
Book :63
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ
بَلَغَنَا مَخْرَجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ بِاليَمَنِ فَرَكِبْنَا سَفِينَةً، فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالحَبَشَةِ، فَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ، فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا، فَوَافَقْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ افْتَتَحَ خَيْبَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكُمْ أَنْتُمْ يَا أَهْلَ السَّفِينَةِ هِجْرَتَانِ»
சமீப விமர்சனங்கள்