தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-2048

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

2048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “ ஸலாம் கூறட்டும். பின்பு, அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி)

அபூஹுமைத் (ரலி)

أبو حميد الساعدي

இறப்பு: ஹிஜ்ரி 60, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் அல்லது அல்முன்திர் பின் ஸஃத்

தந்தை பெயர்: ஸஃத் பின் அல்முன்திர்

வம்சம்: அன்ஸாரீ, கஸ்ரஜ், பனூ ஸாஇதா

புனைப்பெயர்: அபூஹுமைத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 60, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ அல்அன்ஸாரீ ரலி அவர்கள் ஒரு நபித்தோழர் (ஸஹாபி) ஆவார். இவரின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் அல்லது அல்முன்திர் பின் ஸஃத் என்று கூறப்படுகிறது. இவர் மதீனாவைச் சேர்ந்தவர்.

இவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஜாபிர் பின் அப்துல்லாஹ், உர்வா பின் அஸ்ஸுபைர் போன்றோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஜாபிர் பின் அப்துல்லாஹ், உர்வா பின் அஸ்ஸுபைர், அம்ர் பின் ஸுலைம் அஸ்ஸுரக்கீ, அப்பாஸ் பின் ஸஹ்ல் பின் ஸஃத், முஹம்மத் பின் அம்ர் பின் அதா, இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்ஹகம், அப்துர்ரஹ்மான் பின் அபூஸயீத் அல்குத்ரீ, அப்துல்மலிக் பின் ஸயீத் பின் ஸுவைத் அல்அன்ஸாரீ, அபூஉஸைத், மூஸா பின் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ, யஸீத் பின் ஸைத் அல்அன்ஸாரீ

வேறு பெயர்கள்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ, அபூஹுமைத் அல்அன்ஸாரீ


ஆதாரம்: muslimscholars.info (1457) · Should verify


أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ بِشْرِ بْنِ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ سَعِيدِ بْنِ سُوَيْدٍ الْأَنْصَارِيُّ، عَنْ أَبِي حُمَيْدٍ، أَوْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ وَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2048.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-2089.



  • இந்த செய்தியில் ஸலாம் கூறட்டும் என்று வந்துள்ளது. மற்ற அறிவிப்புகளில் ஸலாம் கூறுவது பற்றி வரவில்லை.

மேலும் பார்க்க : அபூதாவூத்-465 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.