தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-465

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பள்ளிவாசலுக்குள் நுழைபவர் என்ன சொல்ல வேண்டும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாம் கூறட்டும். பின்பு, “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்கள்: அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி)

(அபூதாவூத்: 465)

بَابٌ فِيمَا يَقُولُهُ الرَّجُلُ عِنْدَ دُخُولِهِ الْمَسْجِدَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا حُمَيْدٍ، أَوْ أَبَا أُسَيْدٍ الْأَنْصَارِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لِيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، فَإِذَا خَرَجَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-465.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-392.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் அஸீஸ் பின் முஹம்மது நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் சிறிது குறை இருப்பதால் சில நேரம் தவறுசெய்பவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே இது ஷாத் என்ற வகையில் பலவீனமாகும்.
  • ரபீஆ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் பிலால் அவர்கள், பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாம் கூறுவது பற்றி கூறவில்லை. இவர் மற்ற அறிவிப்பாளர்களை விட பலமானவர் என்பதால் இதுதான் சரியானதாகும். மற்றவை ஷாத் என்ற வகையில் பலவீனமாகும். (இது அறிஞர் அப்துல்அஸீஸ் தரீஃபீ அவர்களின் ஆய்வின் முடிவாகும்)
  • மேலும் இந்த செய்தியை அறிவிக்கும் நபித்தோழர் யார் என்று சில அறிவிப்புகளில் சந்தேகமாக அறிவிக்கப்பட்டாலும் சில அறிவிப்புகளில் இரு நபித்தோழர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூஸுர்ஆ அவர்கள் இரு நபித்தோழர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது சரியானதே எனக் கூறியுள்ளார்கள். இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்கள், அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி) என்று சந்தேகமாக அறிவித்திருப்பது பிஷ்ர் பின் முஃபள்ளில் என்பவரின் தவறு என்று கூறியுள்ளார்…

(நூல்: இலலுல் ஹதீஸ்-509 (2/455)

1 . இந்தக் கருத்தில் அபூஹுமைத் (ரலி), அபூஉசைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-1665 , அஹ்மத்-16057 , 23607 , தாரிமீ-1434 , 2733 , முஸ்லிம்-1286 , அபூதாவூத்-465 , இப்னு மாஜா-772 , முஸ்னத் பஸ்ஸார்-3720 , 3721 , நஸாயீ-729 , இப்னு ஹிப்பான்-2048 , 2049 ,

2. அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-773 .

3 . ஃபாத்திமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-26416 .

…குப்ரா நஸாயீ-9839 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.