நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள். பிறகு உன் வலப் பக்கத்தில் சாய்ந்து படு. பிறகு “அல்லாஹும்ம! அஸ்லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க; வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக் கல்லதீ அன்ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த” என்று ஓதிக்கொள்.
(பொருள்: இறைவா! எனது முகத்தை உனக்குக் கீழ்ப்படியச் செய்துவிட்டேன். என் முதுகை உன்னளவில் சாய்த்து விட்டேன். என் காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். உன்மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்.)
(இவ்வாறு பிராத்தித்துவிட்டு) அன்றிரவிலேயே நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபிலேயே இறந்தவன் ஆவாய். காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால், (இந்தப் பிரார்த்தனைகளின்) நன்மைகளைப் பெற்றுக்கொள்வாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
(இப்னுமாஜா: 3876)حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” إِذَا أَخَذْتَ مَضْجَعَكَ أَوْ أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَقُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لَا مَلْجَأَ وَلَا مَنْجَى مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مِتَّ مِنْ لَيْلَتِكَ مِتَّ عَلَى الْفِطْرَةِ، وَإِنْ أَصْبَحْتَ أَصْبَحْتَ وَقَدْ أَصَبْتَ خَيْرًا كَثِيرًا
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3876.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3874.
சமீப விமர்சனங்கள்