தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-666

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை தேடிப் பயணம் சென்றார்கள். (நானும் அவர்களுடன் சென்றேன்). அப்போது அவர்கள், திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைத்தார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராகவும், மெலிந்தும் இருந்துக் கொண்டு (இந்த நாட்களில்) ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பதை நான் பார்த்து, “அல்லாஹ்வின் தூதரே! திங்கள், வியாழக் கிழமைகளில் நீங்கள் ஏன் நோன்பு வைக்கிறீர்கள் என்று கேட்டேன்.  அதற்கவர்கள், “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.

(tayalisi-666: 666)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، أَنَّ عُمَرَ بْنَ الْحَكَمِ بْنِ ثَوْبَانَ حَدَّثَهُ أَنَّ مَوْلَى قُدَامَةَ بْنِ مَظْعُونٍ حَدَّثَهُ أَنَّ مَوْلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ حَدَّثَهُ،

أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ كَانَ يَرْكَبُ إِلَى مَالٍ بِوَادِي الْقُرَى فَكَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فَقُلْتُ لَهُ: أَتَصُومُ وَقَدْ كَبِرْتَ وَرَقَقْتَ؟ فَقَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ الِإثْنَيْنِ وَالْخَمِيسِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَتَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ؟ فَقَالَ: «إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-666.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-662.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமையும், ராவி குதாமா பின் மள்ஊன் என்பவரின் அடிமையும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-2436 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.