பாடம்:
திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைத்தல்.
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை தேடி சென்ற போது நானும் அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள், திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைப்பார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராக இருந்தும் (இந்த நாட்களில்) ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். இதைப் பற்றி அவர்களிடம் கேட்டகப்பட்டபோது அவர்கள், “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.
(அபூதாவூத்: 2436)بَابٌ فِي صَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ أَبِي الْحَكَمِ بْنِ ثَوْبَانَ، عَنْ مَوْلَى قُدَامَةَ بْنِ مَظْعُونٍ، عَنْ مَوْلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ،
أَنَّهُ انْطَلَقَ مَعَ أُسَامَةَ إِلَى وَادِي الْقُرَى فِي طَلَبِ مَالٍ لَهُ، فَكَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَقَالَ لَهُ مَوْلَاهُ: لِمَ تَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، وَأَنْتَ شَيْخٌ كَبِيرٌ؟، فَقَالَ: إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، وَسُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّ أَعْمَالَ الْعِبَادِ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ»،
قَالَ أَبُو دَاوُدَ: كَذَا قَالَ هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ أَبِي الْحَكَم
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2436.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2083.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46009-உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமையும், ராவீ-46020-குதாமா பின் மள்ஊன் என்பவரின் அடிமையும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- குதாமாவின் அடிமை —> உஸாமா (ரலி) யின் அடிமை —> உஸாமா பின் ஸைத் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-666 , அஹ்மத்-21744 , 21781 , 21816 , தாரிமீ-1791 , அபூதாவூத்-2436 , குப்ரா நஸாயீ-2794 , 2795 , 2796 , 2797 , குப்ரா பைஹகீ-8435 ,
- அப்துர்ரஸ்ஸாக் —> ஒரு மனிதர் —> உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7917 ,
- ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> உஸாமா பின் ஸைத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7917 ,
- அபூஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> உஸாமா பின் ஸைத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9765 , அஹ்மத்-21753 , 21791 , முஸ்னத் பஸ்ஸார்-2617 , நஸாயீ-2357 , 2358 , குப்ரா நஸாயீ-2678 , 2679 , ஷரஹ் மஆனில் ஆஸார்-3322 , 3323 ,
… நஸாயீ-2359 , குப்ரா நஸாயீ-2680 ,
- உமர் பின் முஹம்மத் —> ஷுரஹ்பீல் —> உஸாமா பின் ஸைத் (ரலி)
பார்க்க: இப்னு குஸைமா-2119 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-747 .
சமீப விமர்சனங்கள்