தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-827

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 827)

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ السَّعْدِيُّ بِمَرْوَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا الْمُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، غُرِسَ لَهُ شَجَرَةٌ فِي الْجَنَّةِ».


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-827.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-834.




إسناده حسن رجاله ثقات عدا محمد بن مسلم القرشي وهو صدوق إلا أنه يدلس ، ومؤمل بن إسماعيل العدوي وهو صدوق سيئ الحفظ

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் முஸ்லிம் தத்லீஸ் செய்துள்ளார். (அதாவது தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை)
  • மேலும் இதில் வரும் முஅம்மல் பின் இஸ்மாயீல் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாமவர்கள் இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது சரியானதல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா 13 / 346 )

மேலும் பார்க்க : திர்மிதீ-3464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.