தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3464

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(திர்மதி: 3464)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ العَظِيمِ وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3464.
Tirmidhi-Shamila-3464.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3411.




إسناده حسن رجاله ثقات عدا محمد بن مسلم القرشي وهو صدوق إلا أنه يدلس

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    – அபுஸ்ஸுபைர் அவர்களைப்பற்றி இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு ஹஸ்ம்,பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    போன்றோர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.
  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்னுல் கத்தான் போன்றோர் இவர் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்தால் தான் இவரின் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது இவருக்கும் ஜாபிர் (ரலி) அவர்களுக்கும் இடையில் லைஸ் பின் ஸஃத் இருந்தால் தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர். (நூல்: இக்மால்-தஹ்தீபுல் கமால் 10 / 336 )

(சிலர் இவர் தத்லீஸ் செய்திருந்தாலும் அந்த செய்திகள் சரியானவைதான். இவரின் அறிவிப்புகளில் இடையில் விடுபட்டவர்கள் நம்பகமானவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறுகின்றனர்.)

  • இந்த செய்தியில்  ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இந்த கருத்தில் வேறு சில அறிவிப்பாளர்தொடரில் சில ஹதீஸ்கள் வந்துள்ளன. அனைத்திலும் விமர்சனம் உள்ளது. சில அறிஞர்கள் அனைத்து ஹதீஸ்களையும் சேர்த்து இந்த செய்தியை ஹஸன் என்று குறிப்பிடுகின்றனர்.

1 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-3464 , 3465 , இப்னு ஹிப்பான்-826 , 827 , ஹாகிம்-1847 , 1888 , குப்ரா நஸாயீ-10594 , முஸ்னத் அபீ யஃலா-2233 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29416 , அல்முஃஜமுஸ் ஸகீர்-287 ,

2 . முஆத் பின் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-15645 , அல்முஃஜமுல் கபீர்-445 ,

3 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-2468 , இப்னு அபீ ஷைபா-29438 , 29451 ,

4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-3807 , ஹாகிம்-1887 ,


work- தத்லீஸ் அபுஸ்ஸுபைர் , தத்லீஸ்2 , هل الحديث الحسن لغيره حجة عند المتقدمين؟ .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23552 ,

4 comments on Tirmidhi-3464

  1. இது ஆதாரபூர்வமான செய்தி …‌ஆனால் ஹதீஸின் தரம் இதில் கூறிப்பிடவில்லையே சகோதரே

    1. அஸ்ஸலாமு அலைக்கும்

      ஹதீஸின் தரம் More Info என்று இருந்தால் தரம் பற்றிய கூடுதல் தகவல் சேர்க்கவேண்டியுள்ளது என்று பொருளாகும். அபுஸ்ஸுபைர் என்ற முஹம்மது பின் முஸ்லிம் அவர்களைப் பற்றிய விமர்சனம் உள்ளது. இன்ஷா அல்லாஹ் அது பற்றிய முடிவுகள் பதிவு செய்யப்படும்.

  2. அபுஸ்ஸுபைர் என்பவர் மீது குறை இருந்தாலும், இந்த செய்தியின் மதன்(மைய கருத்து) பல அறிவிப்பாளர் தொடரில் ஒரே கருத்தாக இருக்கிறது… அறிவிப்பாளர் தொடர் பல்கினம் காரணமாக இந்த செய்தி இடம்பெறும் எல்லா செய்தியும் பலகினமாக உள்ளது..ஆனால் எல்லா செய்தியின் மதன் (மைய கருத்து) ஒன்றாக இருக்கிறது என்பதால் அனைத்து பலகினமான ஹதீஸ் ஒன்று சேர்த்து ஹஸன் என்ற தரத்தை அடையும் இந்த செய்தி அடையும் என்பதே சரியான கருத்து ..

    தரம்- புறசான்றால் இது ஹஸன் லிகைரிஹி என்று அடைய கூடும்

    அறிஞர்கள் கூறுகிறார்கள்

    இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரை ஹஸன் என்கிறார்கள்
    நூல்- நத்தாஜ் அல் அக்பர்-(1/104)

    இந்த ஹதீஸை இமாம் நசாருதீன் அல்பானி (ரஹ்) ஸஹீஹ் என்று தரமிடுகிறார்கள்
    நூல்- ஸில்ஸிலா அஸ் ஸஹீஹா-64

    இந்த ஹதீஸ் பதிவு செய்த இமாம் அபு ஈஸா திர்மிதீ (ரஹ்) ஹஸன் கரீப் என்றே கூறுகிறார்கள்

    இது தனியாக பார்த்தால் பலகினமான ஹதீஸ் என்றாலும் புறசான்றால் ஹஸன் அடையும் என்ற கருத்துகிறேன்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்

      நீங்கள் கூறிய கருத்தே இந்த செய்தியின் அடிக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பலவீனமான செய்திகளை சேர்த்து ஹஸன் லிகைரிஹீ என்று கூறுவது சில முற்கால ஹதீஸ்கலை அறிஞர்களிடம் இருக்கவில்லை என்ற அடிப்படையில் தற்காலத்தில் சில அறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை.

      இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆரம்பகால, பிற்கால ஹதீஸ்கலை அறிஞர்களின் வழிமுறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.