தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23552

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்ரா-மிஃராஜ் ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “ஜிப்ரீல் (அலை) அவர்களே! உங்களுடன் இருப்பது யார்? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் (தான்) முஹம்மது” என்று பதிலளித்தார்கள். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள், “முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட கட்டளையிடுங்கள். ஏனெனில் சொர்க்கத்தின் மண் மிக வாசனைமிக்கது; சொர்க்க பூமி மிக விசாலமானது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் மரம் நடுதல் என்றால் என்ன? (அது எவ்வாறு?) என்று கேட்டார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” (பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது) என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 23552)

حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا حَيْوَةُ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَخْبَرَهُ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنِي أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ:

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ عَلَى إِبْرَاهِيمَ، فَقَالَ: ” مَنْ مَعَكَ يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا مُحَمَّدٌ، فَقَالَ لَهُ إِبْرَاهِيمُ: مُرْ أُمَّتَكَ فَلْيُكْثِرُوا مِنْ غِرَاسِ الْجَنَّةِ، فَإِنَّ تُرْبَتَهَا طَيِّبَةٌ، وَأَرْضَهَا وَاسِعَةٌ قَالَ: وَمَا غِرَاسُ الْجَنَّةِ؟ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23552.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22931.




  •  இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-?-அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். எனவே இவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

என்றாலும் இந்த செய்தியை முன்திரீ இமாம் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். (தர்கீப்..)

  • இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்தி அபூஅய்யூப் (ரலி) வழியாகவும், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) வழியாகவும் வரும் செய்திகளின் மூலம் பலமாகிறது என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-105)

என்றாலும் ஒவ்வொரு வகையான செய்திகளும் வார்த்தைகளிலும், கருத்திலும் வேறுபட்டிருப்பதால் இவைகளை ஷாஹித், முதாபஅத் மூலம் சரிகாண முடியாது என்று உமர் பின் அப்துல்லாஹ்-முக்பில் என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்: ما درجة حديث: لقيت إبراهيم ليلة أسري بي .


லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.

1 . இந்தக் கருத்தில் அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸைத் பின் ஹுபாப்… —> ஆமிர் பின் ஸஃத் —> அபூஅய்யூப் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-35262 , அல்முஃஜமுல் கபீர்-3900 ,

  • ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> அபூஅய்யூப் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-23552 , இப்னு ஹிப்பான்-821 ,

  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ்… —> அப்துல்லாஹ் பின் ஸஃத் —> அபூஅய்யூப் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1943 , அல்முஃஜமுல் கபீர்-3899 ,

  • அபூஸக்ர் —> அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் உமர் —> அபூஅய்யூப் (ரலி) 

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3898 ,

2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13354 .

3 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3462 .


ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ –  திர்மிதீ-3464 ,

1 . ஜாபிர்

2 . இப்னு அப்பாஸ்…

3 . முஆத்

4 . அப்துல்லாஹ் பின் அம்ர்

5 . அபூஹுரைரா

6 . ஸல்மான்

7 . அப்துல்லாஹ் பின் கைஸ்


இரண்டும்

1 . இப்னு மஸ்வூத்


லாஇலாஹ

1. அனஸ்

2 . அபூஹுரைரா


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க:  திர்மிதீ-3464 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.