தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3462

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இஸ்ரா, மிஃராஜ்—ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள். மேலும் “சொர்க்கத்தின் மண் தூய்மையானது; அதன் தண்ணீர் மதுரமானது; மேலும் சொர்க்கம் விசாலமான காலியிடமாகும்; அதில் மரம் நடவேண்டுமென்றால் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்), அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற வார்த்தைகளைக் கூறவேண்டும் என்பதையும் உமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(திர்மிதி: 3462)

بَابٌ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ قَالَ: حَدَّثَنَا سَيَّارٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ القَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

لَقِيتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي فَقَالَ: يَا مُحَمَّدُ، أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلَامَ وَأَخْبِرْهُمْ أَنَّ الجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ عَذْبَةُ المَاءِ، وَأَنَّهَا قِيعَانٌ، وَأَنَّ غِرَاسَهَا سُبْحَانَ اللَّهِ وَالحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

وَفِي البَابِ عَنْ أَبِي أَيُّوبَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3462.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3409.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21458-அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் பற்றி, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஸாஜீ போன்றோர் இவர் ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர் என்றும்,
  • இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    போன்ற பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/486, தக்ரீபுத் தஹ்தீப்-1/570)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

3 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3462 , முஸ்னத் பஸ்ஸார்-1991 , 1992 , 1993 , அல்முஃஜமுல் கபீர்-10363 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4170 , அல்முஃஜமுஸ் ஸகீர்-539 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-23552 .

3 comments on Tirmidhi-3462

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    நரைத்த முடியை நீக்காதீர், ஏனேனில் அது முஸ்லிமுக்கு ஒளியாகும். இஸ்லாத்தில் இருக்கும் எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விடும் போது அதற்கு ஒரு நன்மை எழுதப்பட்டு, ஒரு அந்தஸ்து உயர்த்தப்பட்டு, அல்லது ஒரு பாவம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என நபி () அவர்கள் கூறினார்கள்.
    (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், திர்மிதி 2821

    இதன் தரம் அறிய வேண்டும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.