அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட்டுக் கொள்ளுங்கள். ஏனேனில் அதன் தண்ணீர் சுவையானது; அதன் மண் தூய்மையானது. எனவே சொர்க்கத்தில் அதிக மரத்தை நடுவதற்கு “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” என்பதை அதிகமாகக் கூறிக்கொள்ளுங்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13354)حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْفَضْلِ الْأَسْفَاطِيُّ، ثنا عَتِيقُ بْنُ يَعْقُوبَ الزُّبَيْرِيُّ، ثنا عُقْبَةُ بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَكْثِرُوا مِنْ غَرْسِ الْجَنَّةِ فَإِنَّهُ عَذْبٌ مَاؤُهَا طَيِّبٌ تُرَابُهَا، فَأَكْثِرُوا مِنْ غِرَاسِهَا، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13354.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13181.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28636-உக்பா பின் அலீ பின் உக்பா பற்றி, இவர் தனித்து அறிவிப்பவர்; பலமானவர்கள் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் விமர்சித்துள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான்-5252)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13354 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-23552 .
சமீப விமர்சனங்கள்