அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.
ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்தியை, (அபுல்அஹ்வஸ்-ஸல்லாம் பின் ஸுலைம் அவர்களைப் போன்றே) அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அவரின் மகன் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் என்பவரும் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தி அபூஇஸ்ஹாக் அவர்களின் வழியாக நபித்தோழரின் சொல்லாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(திர்மிதி: 2572)حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ سَأَلَ اللَّهَ الجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الجَنَّةَ، وَمَنْ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ
«هَكَذَا رَوَى يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، هَذَا الحَدِيثَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَهُ. وَقَدْ رُوِيَ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،» مَوْقُوفًا أَيْضًا
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2572.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2512.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார். - இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர். - இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
- மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 121/130
அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
இறப்பு ஹிஜ்ரி 310
வயது: 86
அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 338
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)
- என்றாலும் இந்த செய்தியை புரைத் பின் அபூமர்யம் அவர்களிடமிருந்து அபூஇஸ்ஹாக் அவர்களின் மகன் யூனுஸ் என்பவரும் அறிவித்துள்ளார். அபூஇஸ்ஹாக் அவர்கள் அறிவிக்கும் செய்தியை யூனுஸ் அவர்களும் அறிவித்தால் இருவரும் அந்த ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவிக்கும் செய்தி தான் என்று நம்முடைய ஆசிரியர்களில் சிலர் கூறியுள்ளனர் என இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா-1096, 2/152).
- அபூஇஸ்ஹாக் அவர்களின் அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்த அஹ்மத்-பின்-ஸஃத் என்பவர் மேற்கண்ட தகவல்படி இந்த செய்தியை சரியானது கூறியுள்ளார்.
(நூல்: அஹாதீஸு அபீஇஸ்ஹாக், பக்கம்: 350)
(இந்த செய்தி நபித்தோழரின் கூற்றாக வந்துள்ளது என்று திர்மிதீ இமாம் கூறியுள்ளார். ஆனால் நாம் பார்த்தவரை அந்த அறிவிப்பாளர்தொடர் கிடைக்கவில்லை)
2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29808 , அஹ்மத்-12170 , 12439 , 12585 , 13173 , 13755 , இப்னு மாஜா-4340 , திர்மிதீ-2572 , முஸ்னத் பஸ்ஸார்-7582 , 7583 , குப்ரா நஸாயீ-7907 , 9858 , நஸாயீ-5521 , முஸ்னத் அபீ யஃலா-3682 , 3683 , இப்னு ஹிப்பான்-1014 , 1034 , ஹாகிம்-1960 ,
மேலும் பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2702 .
சமீப விமர்சனங்கள்