தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3870

A- A+


ஹதீஸின் தரம்: More Info

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கேடுவிளைவிக்கின்றதை வைத்து நோய்க்கு மருத்துவம் பார்ப்பதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 3870)

قَالَ: لَنَا حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّوَاءِ الْخَبِيثِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3870.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3374.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் சிறிய தாபீயீன்களின் பட்டியலில் உள்ளவராவார். சிலர் இவர் தனது தந்தை வழியாக அறிவிக்கும் செய்தி குளறுபடியானவை என விமர்சித்துள்ளனர். சிலர் இவரைப்பற்றி பலமானவர் எனவும், சிலர் சுமாரானவர் எனவும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் சிறிது சந்தேகமாக அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 1097

1 . இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், முஜாஹித் (ரஹ்) செவியேற்ற சில நபித்தோழர்களில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களையும் குறிப்பிட்டுள்ளார். (நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல் 1 / 478 ).

2 . புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்கள்,  முஜாஹித்—அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக ஹதீஸ்களை பதிவு செய்துள்ளனர். பார்க்க: புகாரீ-6246 , முஸ்லிம்-1818 .

3 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், முஜாஹித் (ரஹ்) அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்ற கருத்தை மறுத்துள்ளார்.

4 . இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹம்பல் அவர்களைப்பற்றி கூறும் குறிப்பில் (ஒரு குர்ஆன் வசனத்தின் விளக்கம் பற்றிய கலந்துரையாடலில்) முஜாஹித் கடைசி காலத்தில் மூளைகுழம்பிவிட்டார் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் முஜாஹித் அவர்களைப்பற்றி கூறும் குறிப்பில் முஜாஹிதைப் பற்றி தாபியீ, பலமானவர் என்று தான் குறிப்பிடுகிறார். (நூல்: அஸ்ஸிகாத் எண்-10, 1686)

இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், குர்ஆனுக்கு விளக்கம் கூறுவோர்கள் விசயத்தில் விமர்சனம் செய்யும் போது கடினப்போக்கை கடைப்பிடிப்பவர் என்பதால் இவரின் இந்த விமர்சனம் ஏற்புடையதல்ல என்பது ஹதீஸ்கலை விதியாகும்.

  • இந்த செய்தியை அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், சரியானது எனவும், ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் ஹஸன் என்றும் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23427 , அஹ்மத்-8048 , 9756 , 10194 , இப்னு மாஜா-3459 , அபூதாவூத்-3870 , திர்மிதீ-2045 , முஸ்னத் பஸ்ஸார்-9358 , ஹாகிம்-8260 , குப்ரா பைஹகீ-19682 ,

குறிப்பு: இந்த செய்தியில் வரும் ஃகபீஸ் என்ற வார்த்தைக்கு 1. கெட்டுப்போனது, 2 . கெடுதி தரக்கூடியது, 3 . அருவருப்பானது என்று பொருள் உள்ளது. 4. இந்த ஹதீஸின் சில அறிவிப்பாளர்கள் விஷம் என்று விளக்கம் கூறியுள்ளனர்.

  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் வேறு ஹதீஸின் அடிப்படையில் இதற்கு மது என்று பொருள் கொள்கிறார். (பார்க்க: முஸ்லிம்-4015 )
  • இமாம் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள், போதைத் தரக்கூடியவை, அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்டவை என்று பொருள்கொள்கிறார்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.