தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-884

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

….

அபூஆமிர் அப்துல்லாஹ் பின் லுஹய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் முஆவியா பின் அபூஸுஃப்யான் (ரலி) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றிருந்தோம். மக்காவிற்கு சென்று லுஹர் தொழுகையை நிறைவேற்றிய பின் முஆவியா (ரலி) எழுந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில் அவர்கள் கூறியதாவது:

“(நமக்குமுன்) வேதமுடைய இரு சமுதாயத்தினரும் தங்கள் மார்க்கத்தில் எழுபத்திரண்டு பிரிவினராக பிரிந்துவிட்டனர். இந்த (முஸ்லிம்) சமுதாயம் எழுபத்தி மூன்று பிரிவினராக பிரிவார்கள். அனைவரும் நரகத்தில் இருப்பர். ஒரு கூட்டத்தைத் தவிர. அவர்கள் தான் ஜமாஅத் ஆவர்.  “எனது சமுதாயத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். நாய் கடித்தவனுக்கு எப்படி நாடி நரம்புகளிலும் மூட்டுகளிலும் நோய் ஏற்படுகிறதோ அது போன்று அவர்களுக்கு யூத, கிருத்துவர்களின் மனோஇச்சைகள் என்ற நோய் ஏற்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அரபுக் கூட்டத்தினரே! உங்கள் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்துள்ள(இந்த மார்க்கத்)தை நீங்களே சரியாக கடைபிடிக்காவிட்டால் மற்றவர்கள் எவ்வாறு கடைப்பிடிப்பார்கள்? என்று கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 884)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ الْحَوْطِيُّ، ثنا أَبُو الْمُغِيرَةِ، ح وَحَدَّثَنَا أَبُو زَيْدٍ الْحَوْطِيُّ، ثنا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَا: ثنا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ أَزْهَرَ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِي عَامِرٍ الْهَوْزَنِيِّ عَبْدِ اللهِ بْنِ لُحَيٍّ، قَالَ:

حَجَجْنَا مَعَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ أُخْبِرَ بِقَاصٍّ يَقُصُّ عَلَى أَهْلِ مَكَّةَ، مَوْلًى لِبَنِي مَخْزُومَ، فَأَرْسَلَ إِلَيْهِ مُعَاوِيَةُ، فَقَالَ: أُمِرْتَ بِهَذَا الْقَصَصِ؟، قَالَ: لَا، قَالَ: فَمَا حَمَلَكَ عَلَى أَنْ تَقُصَّ بِغَيْرِ إِذْنٍ؟، قَالَ: نَنْشُرُ عِلْمًا عَلَّمْنَاهُ اللهُ، فَقَالَ مُعَاوِيَةُ: لَوْ كُنْتُ تَقَدَّمْتُ إِلَيْكَ قَبْلَ مُدَّتِي هَذِهِ لَقَطَعْتُ مِنْكَ طَائِفًا، ثُمَّ قَامَ حَتَّى صَلَّى الظُّهْرَ بِمَكَّةَ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَهْلَ الْكِتَابِ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَإِنَّ هَذِهِ الْأُمَّةَ سَتَفْتَرُقُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، يَعْنِي الْأَهْوَاءَ، وَكُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً وَهِيَ الْجَمَاعَةُ» ، وَقَالَ: «إِنَّهُ سَيَخْرُجُ مِنْ أُمَّتِي أَقْوَامٌ تَتَجَارَى بِهِمُ الْأَهْوَاءُ كَمَا يَتَجَارَى الْكَلْبُ بِصَاحِبِهِ، فَلَا يَبْقَى مِنْهُ عِرْقٌ وَلَا مَفْصِلٌ إِلَّا دَخَلَهُ» ، وَاللهِ يَا مَعْشَرَ الْعَرَبِ لَئِنْ لَمْ تَقُومُوا بِمَا جَاءَ بِهِ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَغَيْرُكُمْ مِنَ النَّاسِ أَحْرَى أَنْ لَا يَقُومَ بِهِ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-884.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16277.




மேலும் பார்க்க : அபூதாவூத்-4597 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.