(ஒரு தடவை) முஆவியா பின் ஸுஃப்யான் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தும் போது கூறினார்கள்:
அறிந்துக்கொள்ளுங்கள்! (ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு உரை நிகழ்த்தும் போது, “அறிந்துக்கொள்ளுங்கள்! உங்களுக்கு முன் வேதம்கொடுக்கப்பட்டோர் எழுபத்திரண்டு மார்க்கமுடையவர்களாக பிரிந்துவிட்டனர். இந்த மார்க்கமுடையோர் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவர். எழுபத்திரண்டு கூட்டத்தினர் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தினர் சொர்க்கம் செல்வர். அவர்கள் தான் ஜமாஅத் ஆவர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரஹ்)
முஹம்மது பின் யஹ்யா, அம்ர் பின் உஸ்மான் இவ்விருவரின் அறிவிப்பில், “எனது சமுதாயத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். நாய் கடித்தவனுக்கு நோய் ஏற்படுவதைப் போன்று அவர்களுக்கு யூத,கிருத்துவர்களின் கொள்கை நோய் ஏற்படும்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
நாயால் கடிபட்டவனுக்கு நோயின் தாக்கம் அவனின் மூட்டுகளிலும், நரம்புகளிலும் பரவிவிடும். (அதுபோன்று யூத,கிருத்துவர்களின் கொள்கை அவர்களின் நாடி நரம்புகளில் ஊடுருவி விடும் என்று) அம்ர் பின் உஸ்மான் விளக்கம் கூறுகிறார்.
(அபூதாவூத்: 4597)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَا: حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا صَفْوَانُ، ح وحَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنِي صَفْوَانُ، نَحْوَهُ قَالَ: حَدَّثَنِي أَزْهَرُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَرَازِيُّ، عَنْ أَبِي عَامِرٍ الْهَوْزَنِيِّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ،
أَنَّهُ قَامَ فِينَا فَقَالَ: أَلَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِينَا فَقَالَ: ” أَلَا إِنَّ مَنْ قَبْلَكُمْ مِنْ أَهْلِ الْكِتَابِ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَإِنَّ هَذِهِ الْمِلَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ: ثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَهِيَ الْجَمَاعَةُ
«زَادَ ابْنُ يَحْيَى، وَعَمْرٌو فِي حَدِيثَيْهِمَا» وَإِنَّهُ سَيَخْرُجُ مِنْ أُمَّتِي أَقْوَامٌ تَجَارَى بِهِمْ تِلْكَ الْأَهْوَاءُ، كَمَا يَتَجَارَى الْكَلْبُ لِصَاحِبِهِ ” وَقَالَ عَمْرٌو: «الْكَلْبُ بِصَاحِبِهِ لَا يَبْقَى مِنْهُ عِرْقٌ وَلَا مَفْصِلٌ إِلَّا دَخَلَهُ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3981.
Abu-Dawood-Shamila-4597.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3983.
إسناده حسن رجاله ثقات عدا أزهر بن سعيد الحرازي وهو صدوق حسن الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அஸ்ஹர் பின் ஸயீத் பற்றி இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம், இப்னு கல்ஃபூன்,பிறப்பு ஹிஜ்ரி 555
இறப்பு ஹிஜ்ரி 636
வயது: 81
இப்னு வள்ளாஹ் பிறப்பு ஹிஜ்ரி 199
இறப்பு ஹிஜ்ரி 286
வயது: 87
போன்றோர் பலமானவர் எனக்கூறியுள்ளனர். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் இவரைப்பற்றி ஹஸனுல் ஹதீஸ் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளார். - இவர் அலீ (ரலி) அவர்களை திட்டும் கொள்கையுடையவர் (நாஸிபீ) என்பதால் இவரை சில அறிஞர்கள் பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/105)
- என்றாலும் இது போன்றவர்கள் தங்கள் கொள்கைக்கு சாதகமாக அறிவிக்கும் போது அவர்களின் அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது. மற்ற விசயங்களில் ஏற்கலாம் என்பது ஹதீஸ்கலை விதி என்பதால் இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்கள் இந்த செய்தியை ஸஹீஹ் என்றும், ஹாபிள் இராகீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற அறிஞர்கள் ஹஸன் என்றும் கூறியுள்ளனர்.
இதன் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் பகிய்யது பின் வலீத் வரும் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது.
மற்றவை ஹஸன் தர அறிவிப்பாளர்தொடர் என்பதுடன் ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.
3 . இந்தக் கருத்தில் முஆவியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-16937 , தாரிமீ-2560 , அபூதாவூத்-4597 , அல்முஃஜமுல் கபீர்-884 , 885 ,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3992 .
இந்த ஹதீஸ் இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) ஸஹீஹ் என்கிறார்கள்
மஜ்மூ அல் ஃபத்வா-(3/345)
இந்த ஹதீஸ் இமாம் இராக்கீ(ரஹ்) ஸஹீஹ் என்கிறார்கள்
தஹ்ரீஜ் அல் இஹ்யா-(9/133)
இந்த ஹதீஸ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) ஹஸன் என்று சான்று கொடுக்கிறார்கள்
தஹ்ரீஜ் அல் கஷ்ஷாஃப்-63
அஸ்ஸலாமு அலைக்கும்.
இமாம் இராக்கீ (ரஹ்) அவர்கள் இதன் அறிவிப்பாளர்தொடர் பற்றி ஜய்யித்-ஹஸன் என்றே குறிப்பிடுகிறார். தக்ரீஜுல் இஹ்யா பக்கம்-1333.