தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3992

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

யூதர்கள் 71 கூட்டமாக பிரிந்தனர். அவர்களில் 1 கூட்டம் சொர்க்கம் செல்வர். 70 கூட்டத்தினர் நரகம் செல்வர்.

கிருத்தவர்கள் 72 கூட்டமாக பிரிந்தனர். அவர்களில் 71 கூட்டத்தினர் நரகம் செல்வர். 1 கூட்டம் சொர்க்கம் செல்வர்.

இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! எனது சமுதாயத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அவர்களில் ஒரு கூட்டம் சொர்க்கம் செல்வர். (மற்ற) 72 கூட்டத்தினர் நரகம் செல்வர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கம் செல்லும் (அந்தக்) கூட்டம் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ஜமாஅத் (ஜமாஅஹ்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

(இப்னுமாஜா: 3992)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَسَبْعُونَ فِي النَّارِ، وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، فَإِحْدَى وَسَبْعُونَ فِي النَّارِ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ،

وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً، وَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ؟ قَالَ: «الْجَمَاعَةُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3992.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3990.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20673-அப்பாத் பின் யூஸுஃப் என்பவர் பற்றி இப்ராஹீம் பின் அலா அவர்களும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களும் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் ஸஃப்வான் பின் அம்ர் அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் வேறு யாரும் அறிவிக்காத செய்திகளை (தனித்து) அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், صدوق يغرب-இவர் ஸதூக், யுஃக்ரிபு என்று கூறியுள்ளார். இதன் பொருள் இவர் நம்பகமானவர்; சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்பதாகும். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களின் கூற்றின்படியே இதைக் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார். இதன் பொருள் இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக் கூடாது. இவர் போன்று மற்றவர்கள் அறிவித்தால் ஏற்கலாம் என்பதாகும்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/556, தஹ்தீபுல் கமால்-14/179, அல்காஷிஃப்-3/79, தஹ்தீபுத் தஹ்தீப்-2/285 , தக்ரீபுத் தஹ்தீப்-1/484)

  • இந்தச் செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் ஜய்யித்-ஹஸன் என்று கூறியுள்ளார்.

(நூல்: ஸஹீஹா-1492)

ஒரு நம்பகமானவர் மற்றவர்களுக்கு மாற்றமாக தனித்து அறிவிக்கும்போது அதை ஏற்கக்கூடாது. ஆனால் மற்றவர்களுக்கு மாற்றமாக இல்லை என்றால் அதை ஏற்கலாம் என்பது பொதுவான ஹதீஸ்கலை விதியாகும்.

ஸதூக், யுஃக்ரிபு என்று கூறப்பட்டவர்கள் அறிவிக்கும் செய்தியை மற்றவர்களும் அறிவித்தால் அதை ஏற்கலாம் என்பதால் தான் இத்தகைய தரத்தில் உள்ளவர்களின் சில செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரும் பதிவுசெய்துள்ளனர்.

என்றாலும் இந்த செய்தியின் கருத்து சிறிது மாற்றமாக வந்துள்ளது. மற்றச் செய்திகளில் பனீ இஸ்ரவேலர்கள் 72 கூட்டமாக பிரிந்தனர் என்று வந்துள்ளது. இந்தச் செய்தியில் யூதர்கள் 71 கூட்டமாகவும், கிருத்துவர்கள் 72 கூட்டமாகவும் பிரிந்தனர் என்று வந்துள்ளது. இது மற்ற செய்திகளுக்கு மாற்றம் என்று கூறமுடியாது. (ஏனெனில் பனீஇஸ்ரவேலர்கள் என்று பொதுவாக கூறும்போது அதில் இருகூட்டத்தினரும் வந்துவிடுவார்கள் என்பதால் அந்த எண்ணிக்கை மட்டுமே கூறப்படுகிறது).

அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக அறிவிக்கும் முஹம்மது பின் அம்ர் அவர்கள், இந்த எண்ணிக்கையை சந்தேகமாக அறிவித்துள்ளார் என்பதால் இது சரியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

(பார்க்க: அபூதாவூத்-4596)

நாம் பார்த்தவரை இந்தச் செய்தியை ஸஃப்வான் பின் அம்ரிடமிருந்து அம்ர் பின் உஸ்மான் என்பவரும் அறிவித்துள்ளார். எனவே இதை அப்பாத் பின் யூஸுஃப் தனித்து அறிவிக்கவில்லை.

(பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-129)

மேற்கண்ட தகவல் மூலம் இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாகும்; இந்தச் செய்தி வேறு சில ஹஸன் தர அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளதால் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ-வேறு சான்றால் சரியானது என்று முடிவு செய்யலாம்.

ஆய்வுக்காக:

1 . حديث الافتراق رواية ودراية [الجزء الأول] .

2 . حديث الافتراق رواية ودراية [الجزء الثاني] .

3 . حديث تفرق الأمة رواية ودراية .

1 . இந்தக் கருத்தில் அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3992 , முஸ்னத் பஸ்ஸார்-2755 , அல்முஃஜமுல் கபீர்-90 , 91 , 129 , ஹாகிம்-6325 , 8325 ,

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3993 .

3. முஆவியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4597 .

4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4596 .

5 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு அபீ ஷைபா-37892 .

6 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10357 .

7 . ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1199 .

8 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: பைஹகீ–தலாஇலுன் நுபுவ்வஹ்-2735 .

9 . யஸீத் பின் அபான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அப்துர் ரஸ்ஸாக்-18674 .

10 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2641 .

11 . அம்ர் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3 .

12 . கதாதா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-18675 .

13 . …சொர்க்கம் செல்லும் ஒரு கூட்டம் பெரும்பான்மையாக இருந்தவர்கள்.

(நூல்: தாரீக்கு வாஸித்-692, அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).

இதில், ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் கைஸ் அவர்களின் பாட்டி யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமானது.

14 . எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று கூட்டத்தினராக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். வெற்றிபெறும் ஒரு கூட்டத்தைத் தவிர. ஒவ்வொரு கூட்டத்தினரும் தாங்களே வெற்றிபெறும் கூட்டத்தினர் என வாதிடுவர்.

(நூல்: முஸ்னத் ரபீஉ பின் ஹபீப்-41, அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி).

இதில் வரும் ரபீஉ பின் ஹபீப் – நிராகரிக்கப்பட்டவர், அபூஉபைதா என்பவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமானது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.